Monday, December 26, 2011

விண்டோஸ் கணினிகளில் கடவுச்சொற்கள் எவ்வாறு கையாளப்படுகின?

இப்பதிவைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் பெரும்பாலும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பயன்படுத்துவீர்கள் என எண்ணுகிறேன் அதிலும் பெரும்பாலானவர்கள் இன்னமும் விண்டோஸ் XP இனையே பயன்படுத்திக்கொண்டிருக்கினறனர். ஒவ்வொருவரும் தங்களது கணிணி மற்றும் அதில் பதிந்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை அமைத்திருப்பர்.


பெரும்பாலானவகள் இந்த கடவுச்சொல்லானது மிகவும் பாதுகாப்பானது, வலிமையனது எனவும் கணினிக்கு கடவுச்சொல்லை அமைத்துவிட்டால் யாராலும் அந்த கடவுச்சொல்லைமீறி கணினியை பயன்படுத்த இயலாது என எண்ணுகின்றனர்.  அவ்வாறான எண்ணத்தையுடையராக நீங்கள் இருந்தால் உங்களிடம் என்னதான் கடவுச்சொல்லைப் பயன்படுத்தினாலும் அதனை உடைத்துவிடலாமென கூறினால் எப்படியிருக்கும்?.... ஆம், இது உண்மைதான் நிச்சயமாக உங்கள் கணினியின் கடவுச்சொல்லை சில வழிகள் மூலமாக கைப்பற்ற இயலும்.  இது பற்றி மேலும் விபரங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்.


முதலில் கடவுச்சொற்கள் கணினியில் எவ்வாறு கையாளப்படுகின்றன என பார்க்கலாம். Security Accounts Manager (SAM) என்பது ஒரு Registry file ஆகும். இது கணினியில் "C:\WINDOWS\system32\config" என்ற இடத்தில் சேமிக்கப்படும்.  இந்த File இல் தான்  LM hash, NTLM hash போன்ற மறையாக்க முறைகளில் மாற்றம்செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது.







இந்த SAM File இனை திறந்து படித்துவிட்டால் கடவுச்சொல் தொடர்பான விடையங்களை அறிந்துவிடலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது SAM File இனை கொப்பி செய்யவோ திறக்கவோ விண்டோஸ் அனுமதிக்காது.  இதை திறப்பதற்கு நாம் வேறு ஒரு இயங்குதளத்திலிருந்து கணினியை Boot செய்ய வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் Live booting என்பது பயபடுகிறது. Live booting என்றால் நாம் சில மென்பொருட்களை பென்ரைவ் இல் போர்டபிளாக பதிந்து பயன்படுத்துவது போல இயங்குதளத்தை பென்ரைவில் அல்லது சிடி இல் பதிந்து அதை கணினியில் பதியாமலே பயன்படுத்துவது ஆகும்.


இந்த வேலையை செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது Ophcrack என்ற மென்பொருளாகும். இதை சிடி யிலோ அல்லது பென்ரைவிலோ பதிந்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை Ophcrack இங்கு கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.




1) இனி நீங்கள் டவுன்லோட் செய்த ISO file இனை சிடி யில் பதியவும்.

2) கணினியை Restart செய்து விண்டோஸ் ஆரம்பிப்பதற்கு முன் F8 key இனை அழுத்தி Boot order இல் சிடியை தெரிவுசெய்து என்டர் அழுத்தவும். (F8 அழுத்துவது சில கணினிகளுக்கு கீ மாறக்கூடும் கீ முடியாவிட்டால் BIOS மெனுவில் Boot order இல் 1st Boot Drove என்பதில் சிடி இனை தெரிவு செய்திடவும்.)

3) இனி மென்பொருள் இயங்க தொடங்கிவிடும், அடுத்து தோன்றுகிற செய்தியில் Ophcrack Graphic mode என்பதை தெரிவுசெய்து என்டர் அழுத்தவும்.

4) சிறிது நேரத்தில் (2-3 நிமிடம்) உங்கள் கணினியின் கடவுச்சொல் காட்டப்படும்.

[Note: தயவுசெய்து இந்த மென்பொருளை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டாம். உங்களது கணினியில் சொந்த தேவைக்காக மட்டும் பயன்படுதவும்.]

Tuesday, December 13, 2011

Telnet என்பது யாது? இது எங்கு பயன்படுகிறது?

இது வலையமைப்பில் மிக முக்கியமன ஒரு பாதைவழி ஆகும் (Network Protocol). இது இணையத்தளத்திலும் சாதாரண வலையமைப்பிலும் எழுத்து வடிவிலான செயற்பாட்டுக் கட்டளைகளையும் தகவலையும் பரிமாற்றிக்கொள்வதற்கு பயன்படுகிறது.


இதன் மூலம் ஒரு தடவையில் 8 Byte தகவலை அனுப்ப மற்றும் பெற முடியும் (இணையம் ஆனாலும் சரி வலையமைப்பு ஆனாலும் சரி அனைத்துவகை தகவல் தொடர்பும் TCP [ Transmission Control Protocol ] முலம் பரிமாற்றப்படுகிறது).  Telnet ஆனது 1969 இல் அறிமுகப்படுத்தப்பட்டது இது Internet Engineering Task Force  (IETF) எனும் பிரிவினுள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஆரம்ப காலங்களில் CMD (command method) மூல்மாகவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாகவும் GUI மென்பொருள் வளர்ச்சியின் காரணமாகவும் CMD பாவனை காலப்போக்கில் குறைவடைந்து தற்பொழுது Server இலிருந்த் தகவலை பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக Client கணினிகளில் செயற்படுகிறது. 

Telnet ஆனது கீழ் வரும் பயன்பாடுகளில் பிரபலமாக உள்ளது:
  • எமது கணினியில் இருந்து Host/Server இணை அணுகுவதற்கு. 
  • வலையமைபில் கணினிகளை முகாமைத்துவப்படுத்துவதற்கு
  •  மின்னஞ்சலை கையாள்வதற்கு.

Monday, October 17, 2011

இணையப்பக்கம் ஒன்றை முழுமையக Screen sot எடுப்பது Add-on


Web page ஒன்றை முழுமையாக Screen shot எடுப்பதற்கான ஒரு Add ons ஆகும். பல்வேறு சந்தர்ப்பங்களில் Web page களை Screen shot எடுக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. அவற்றிற்கான இலகுவான தீர்வாக இது காணப்படுகிறது. இதன் மூலம் web page இனை முழுமையாக படம் எடுத்தல், திரையில் தோன்றும் பகுதியினை படம் எடுத்தல், தெரிவு செய்யப்பட்ட பகுதியை படம் எடுத்தல் போன்ற மூன்று வழிகளில் Screen shot எடுக்க முடிகிறது.


தேவையான web page இனை Open செய்து page இல் Right Click செய்து மெனுவில் Screen Gran என்பதில் தெரிவுசெய்து கொள்ளலாம்.

Download செய்ய Click Here!

Tuesday, August 16, 2011

கையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத்தளங்கள்



உங்கள் கையடக்கத் தொலைபேசியில் தமிழ், சிங்கள, ஹிந்தி, மற்றும் ஏணைய மொழிகளில் அமைத்த எந்த இணையத்தளங்களையும் பார்வையிடுவதற்கு.....

முதலில் Opera mini Browser இனை Download செய்து மொபைல் இன்  Install செய்திடவும். இப்போது Opera mini Open செய்து Address bar இல் "about:config" என டைப் செய்து OK இனை அழுத்திடவும்
.
வரும் மெனு வில் "Use bit map fonts for complex scripts" எனும் இடத்தில் No என இருப்பதை Yes என மாற்றி Save செய்திடவும்.

இனி தமிழ் இணையப்பக்கத்தினை Open செய்து பார்க்கவும் தமிழ் பெட்டிபெட்டியாக இல்லாமல் தமிழ் எழுத்துருவில் வாசிக்க கூடிய வகையில் பக்கம் காணப்படுவதை காணலாம்.

Wednesday, May 25, 2011

Morse Code என்றால் என்ன?


Morse Code எனப்படுவது எழுத்து வடிவங்களை சங்கேத முறையில் (இரகசியமாக) பரிமாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகும். இது இரண்டு முறைகளில் பரிமாற்றம் நடைபெறுகிறது. ஒன்று சங்கேத குறியீட்டு வடிவம், இரண்டு ஒலி வடிவம் என்பன ஆகும். Morse Code முறையானது Samuel F. B. Morse என்பவராலும் இலத்திரனியல் முறையில் Alfred Vail என்பவராலும் 1840 களில் அறிமுகம் செய்யப்பட்டது எனினும் 1890 இலேயே இது வானொலி அலைகளாக மாற்றப்பட்டு தகவல் பரிமாற்றம் செய்யப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

சங்கேத குறியீட்டு வடிவடிவத்தினை அடிப்படையாகக் கொண்டே தகவல் பரிமாற்றம் இங்கு நடைபெறுகின்றது. ஆங்கிலத்திலுள்ள A-Z எழுத்துக்களும் 0-9 வரையான இலக்கங்களும் முறையே "Dots" மற்றும் "Dashes" (புள்ளி மற்றும் கோடு) ஆகிய குறியீடுகளே பயன்படுகின்றது. உதாரணமாக ஆங்ககில எழுத்து "i" இல் உள்ள மேலே உள்ள புள்ளியும் கீழே காணப்படும் பகுதி கோடு எனவும் கொள்ளப்படுகிறது. இந்த இரு குறீயீடுகளையும் வைத்து அனைத்து எழுத்துக்களும் வித்தியாசமான வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப் படுகின்றது. இனி இந்த Morse Code இனை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போமானால்


A எனும் ஆங்கில எழுத்தினை Morse Code இல்
என்றவாறு குறிப்பிடலாம்.  அடுத்து உள்ள படத்தில் "A" இனது வடிவம்

 எல்லா எழுத்துக்களுக்குமான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 



 இது எவ்வாறு ஒலி வடிவமாக அனுப்பப்படுகிறது என பார்ப்போமானால்  புள்ளிகள் வரும் இடங்களில் குறில் ஒலியாகவும் கோடு வரும் இடங்களில் நெடில் ஒலியாகவும் மற்றப்படுகிறது. இதற்கு  ஒரு வகையான Translator  கருவி பயன் படுத்தப்படுகிறது.  ஒலிவடிவத்திலுள்ள சமிஞ்சைகள் மிங்காந்த அலைகளாக மாற்றம் செய்யப்பட்டு ஒலிபரப்பு செய்யப்படுகிறது அதாவது இது ஒரு வானொலி பிரிவர்த்தனை நிலையம் போல செயற்படுகிறது (Sending).    

இனி தகவலை பெற்றுக்கொள்ளும் இடத்தில் ( தகவல் பெற்றுக்கொள்ளும் இடம் பல கிலோ மீற்றர் தூரமாகவும் இருக்கலாம்.) Reviver மூலமாக பெறப்பட்ட சமிஞ்சைகளான குறில் ஒலிகளும், நெடில்களும்    மீண்டும் புள்ளிகளாகவும் கோடுகளாகவும் மாற்றப்பட்டு Print செய்யப்படுகிறது. 

உதாரணத்திற்கு கீழே இரு ஒலி வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன டவுன்லோட் செய்து பார்க்கவும்.

ஆங்கில எழுத்துக்களை Morse Code இற்கு மாற்றுவதெற்கென ஒரு இணையத்தளம் உள்ளது கிளிக் செய்யவும்





Monday, May 16, 2011

Northbridge, Southbridge என்பது யாது?

Northbridge, Southbridge என்றால் என்ன? இவை கணினியில் எங்கு உள்ளது? இவற்றின் தொழிற்பாடு யாது?

Northbridge, Southbridge என்பது Mother Board இல் அமைந்துள்ள மிக முக்கியமான பகுதியாகும். Mother Board இன் பிரதான தகவல் பரிமாற்றதிற்கான பாலமாக இவை செயற்படுகின்றன (அதனால் தான் இவை Northbridge, Southbridge எனப்படுகிறன).

Northbridge ஆனது கணினியின் உயிர் இயக்கத்திற்கு தேவையான
  • Processor
  • The level 2 cache (level 2 cache என்பது Processor இல் இருந்து வரும் தகவலை தற்காலிக Memory இல் எடுத்து அவற்றை சீரான ஒழுங்கு முறையில் பாலத்தினூடாக அனுப்ப உதவுவது ஆகும். level 2 cache Memory குழப்பமடையும் சந்தர்ப்பத்திலேயே கணினி இறுகி நிற்கின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது.)

  • Memory (RAM)
  • PCI bus
  • Accelerated Graphics Port (AGP) போன்றவற்றிலிருந்து பெறப்படும் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது.  Northbridge ஆனது  Southbridge ஐ விட அதிய வினைத்திறனும் வேகமும் உடையதாக காணப்படுகிறது. Northbridge இல் இருந்து Processor உடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு FSB (Front Side Bus) என்ற பாலம் உள்ளது.

Southbridge ஆனது சாதாரண மற்றும் அடிப்படை கூறுகளுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றது. அதாவது
  • உள்ளீட்டு/ வெளீயீட்டு கருவிகள்
  • Serial Port
  • Parallel Port
  • VGA Port
  • USB Port
  • IDE Cable (Hard Disk and CD ROM) ஆகியவற்ற்லிருந்து தகவலை பரிமாற்ற்குகிறது. 
 தற்போது வெளியாகும் Mother Board களில் Northbridge, Southbridge ஆகியவற்றின் திறனுக்கும், வேகத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. Northbridge, Southbridge இன் சிப்   தயாரிப்பு நிறுவங்களாக VIA, AMD மற்றும் Intel ஆகியவை பிரசித்திபெற்றவை ஆகும். நாளுக்கு நாள் புதிதாக வெளியாகும் Mother Board களில்  Northbridge, Southbridge பகுதி பல மாற்றங்களிக்கு உட்பட்டு வருகிறது.

Sunday, February 6, 2011

விரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்

நாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது Start Menu இனூடாக புரோக்கிராம்களை Open செய்துகொள்வோம் இதன் போது நேரமும் வீண் விரயமாகின்றது அதை Open செய்வதே ஒரு வேலையாகவும் அமைகின்றது. இந்த வேலையை இலகுவாகாச் செய்வதற்கே ஒரு செய்வதற்காகவே இருக்கிறது ஒரு சூப்பர் மென்பொருள் இருக்கிறது அதுதான் Launchy  இது பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவானது. Install செய்ததும் System Ray இனுள் வந்து அமர்ந்து கொள்ளும், நீங்கள் Alt+Space இனை அழுத்தியதும் Window ஒன்று தோன்றும் (கீழே படத்தில் உள்ளவாறு.)
 அதில் நீங்கள் திறக்க விரும்பும் புரோக்கிராமின் முதல் எழுத்துக்களை Type செய்ததும் அவ்வெழுத்திலுள்ள புரோக்கிராம்கள் Search செய்யப்பட்டு வரிசைப்படுத்தப்படும் இலகுவாக Select செய்ததும் Enter Key இனை அழுத்தவும்! நொடிப்பொழுதில் Open செய்துவிடலாம். இதனை Download செய்வதற்கு Click Here

Sunday, January 16, 2011

Windows இல் Task Manager இயங்காதபோது கைகொடுக்கும் Process Explorer

சிலவகை வைரஸ்களால் Windows இல் உள்ள Task Manager இயங்காமல் போகிறது அவ்வாறான வேளைகளில் Task Manager இற்குப் பதிலாக கிடைக்கின்ற மென்பொருள்தான் இந்த Process Explorer.

Task Manager ஆனது நமது கணினியில் தற்போது நடந்துகொண்டிருக்கும் Process களையும், கணினியின் CPU செயல்பாடுகளையும், Page File Usage இனையும் அறிய உதவுகிறது. அதில் நாம் அதிகம் பயன்படுத்துவது Processes என்ற பகுதியே ஆகும்.  இதில் கணினியின் உள்ளே மறைமுகமாக நடந்துகொண்டிருக்கும் தேவையில்லாத Process களை நிறுத்தலாம். ஆனால் சிலவகையான Root-kit Virus களின் தாக்குதல்களினால்  இந்த Task Manager ம், Registry ம் செயல் இழக்கப்படுகின்றது. அவாறான நேரங்களில் Task Manager இனை மீட்டெடுப்பதற்கும், வைரஸ் களை அகற்றுவதற்கும் Process Explorer பயன் படுகின்றது.

Task Manager இனை விட இதில் அதிக வசதிகள் காணப்படுகிறது.
1) Process களை தனிதனி பிரிவுகளாக அறியலாம்.
2) ஒவ்வொரு Process களுக்கும் Description கொடுக்கப்பட்டுள்ளது.
3) Process எங்கிருந்து நடைபெறுகிறது என்பதை இலகுவாக அறியலாம், உதாரணம்- "C:\WINDOWS\Explorer.EXE"

Download செய்வதற்கு இங்கு Click செய்யவும்.

Friday, January 14, 2011

முற்றிலும் இலவசமாக Internet Download Manager

இணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இது இணையத்தில் 30 நாள் Trial Version ஆகவே கிடைக்கிறது தேவையானால் $29.95 செலவு செய்து வாங்க வேண்டும். பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு தடவையும் 30 நாள் Trial Version முடிந்ததும் மீண்டும் Download செய்து பயன்படுத்துகின்றனர். அவர்களுக்காவே இங்கு கிடைக்கிறது Internet Download Manager மென்பொருள் முற்றிலும் இலவசமாக!

இதனை Download செய்ததும் ஒருதடவை Setup.exe என்ற கோப்பை ஒருதடவை இயக்கினால் போதும்  தன்னியக்கமாகவே மென்பொருள் கணினியில் நிறுவப்பட்டுவிடும். மென்பொருளை Download செய்வதற்கு இங்கு கிளிக் செய்யவும்.
Related Posts with Thumbnails