Wednesday, May 25, 2011

Morse Code என்றால் என்ன?


Morse Code எனப்படுவது எழுத்து வடிவங்களை சங்கேத முறையில் (இரகசியமாக) பரிமாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகும். இது இரண்டு முறைகளில் பரிமாற்றம் நடைபெறுகிறது. ஒன்று சங்கேத குறியீட்டு வடிவம், இரண்டு ஒலி வடிவம் என்பன ஆகும். Morse Code முறையானது Samuel F. B. Morse என்பவராலும் இலத்திரனியல் முறையில் Alfred Vail என்பவராலும் 1840 களில் அறிமுகம் செய்யப்பட்டது எனினும் 1890 இலேயே இது வானொலி அலைகளாக மாற்றப்பட்டு தகவல் பரிமாற்றம் செய்யப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

சங்கேத குறியீட்டு வடிவடிவத்தினை அடிப்படையாகக் கொண்டே தகவல் பரிமாற்றம் இங்கு நடைபெறுகின்றது. ஆங்கிலத்திலுள்ள A-Z எழுத்துக்களும் 0-9 வரையான இலக்கங்களும் முறையே "Dots" மற்றும் "Dashes" (புள்ளி மற்றும் கோடு) ஆகிய குறியீடுகளே பயன்படுகின்றது. உதாரணமாக ஆங்ககில எழுத்து "i" இல் உள்ள மேலே உள்ள புள்ளியும் கீழே காணப்படும் பகுதி கோடு எனவும் கொள்ளப்படுகிறது. இந்த இரு குறீயீடுகளையும் வைத்து அனைத்து எழுத்துக்களும் வித்தியாசமான வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப் படுகின்றது. இனி இந்த Morse Code இனை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போமானால்


A எனும் ஆங்கில எழுத்தினை Morse Code இல்
என்றவாறு குறிப்பிடலாம்.  அடுத்து உள்ள படத்தில் "A" இனது வடிவம்

 எல்லா எழுத்துக்களுக்குமான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 



 இது எவ்வாறு ஒலி வடிவமாக அனுப்பப்படுகிறது என பார்ப்போமானால்  புள்ளிகள் வரும் இடங்களில் குறில் ஒலியாகவும் கோடு வரும் இடங்களில் நெடில் ஒலியாகவும் மற்றப்படுகிறது. இதற்கு  ஒரு வகையான Translator  கருவி பயன் படுத்தப்படுகிறது.  ஒலிவடிவத்திலுள்ள சமிஞ்சைகள் மிங்காந்த அலைகளாக மாற்றம் செய்யப்பட்டு ஒலிபரப்பு செய்யப்படுகிறது அதாவது இது ஒரு வானொலி பிரிவர்த்தனை நிலையம் போல செயற்படுகிறது (Sending).    

இனி தகவலை பெற்றுக்கொள்ளும் இடத்தில் ( தகவல் பெற்றுக்கொள்ளும் இடம் பல கிலோ மீற்றர் தூரமாகவும் இருக்கலாம்.) Reviver மூலமாக பெறப்பட்ட சமிஞ்சைகளான குறில் ஒலிகளும், நெடில்களும்    மீண்டும் புள்ளிகளாகவும் கோடுகளாகவும் மாற்றப்பட்டு Print செய்யப்படுகிறது. 

உதாரணத்திற்கு கீழே இரு ஒலி வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன டவுன்லோட் செய்து பார்க்கவும்.

ஆங்கில எழுத்துக்களை Morse Code இற்கு மாற்றுவதெற்கென ஒரு இணையத்தளம் உள்ளது கிளிக் செய்யவும்





Monday, May 16, 2011

Northbridge, Southbridge என்பது யாது?

Northbridge, Southbridge என்றால் என்ன? இவை கணினியில் எங்கு உள்ளது? இவற்றின் தொழிற்பாடு யாது?

Northbridge, Southbridge என்பது Mother Board இல் அமைந்துள்ள மிக முக்கியமான பகுதியாகும். Mother Board இன் பிரதான தகவல் பரிமாற்றதிற்கான பாலமாக இவை செயற்படுகின்றன (அதனால் தான் இவை Northbridge, Southbridge எனப்படுகிறன).

Northbridge ஆனது கணினியின் உயிர் இயக்கத்திற்கு தேவையான
  • Processor
  • The level 2 cache (level 2 cache என்பது Processor இல் இருந்து வரும் தகவலை தற்காலிக Memory இல் எடுத்து அவற்றை சீரான ஒழுங்கு முறையில் பாலத்தினூடாக அனுப்ப உதவுவது ஆகும். level 2 cache Memory குழப்பமடையும் சந்தர்ப்பத்திலேயே கணினி இறுகி நிற்கின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது.)

  • Memory (RAM)
  • PCI bus
  • Accelerated Graphics Port (AGP) போன்றவற்றிலிருந்து பெறப்படும் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது.  Northbridge ஆனது  Southbridge ஐ விட அதிய வினைத்திறனும் வேகமும் உடையதாக காணப்படுகிறது. Northbridge இல் இருந்து Processor உடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு FSB (Front Side Bus) என்ற பாலம் உள்ளது.

Southbridge ஆனது சாதாரண மற்றும் அடிப்படை கூறுகளுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றது. அதாவது
  • உள்ளீட்டு/ வெளீயீட்டு கருவிகள்
  • Serial Port
  • Parallel Port
  • VGA Port
  • USB Port
  • IDE Cable (Hard Disk and CD ROM) ஆகியவற்ற்லிருந்து தகவலை பரிமாற்ற்குகிறது. 
 தற்போது வெளியாகும் Mother Board களில் Northbridge, Southbridge ஆகியவற்றின் திறனுக்கும், வேகத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. Northbridge, Southbridge இன் சிப்   தயாரிப்பு நிறுவங்களாக VIA, AMD மற்றும் Intel ஆகியவை பிரசித்திபெற்றவை ஆகும். நாளுக்கு நாள் புதிதாக வெளியாகும் Mother Board களில்  Northbridge, Southbridge பகுதி பல மாற்றங்களிக்கு உட்பட்டு வருகிறது.
Related Posts with Thumbnails