Saturday, July 31, 2010

பதிவுலகில் எந்த துறையை தேர்ந்தெடுப்பது?

எல்லோருக்கும் தாமும் ஒரு வலைத்தளம் வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அந்த வலைத்தளத்தினை பார்க்கும் எல்லோரும் பயன்பெற வேண்டும்  என்ற எண்ணத்துடனேயே தகவல்களை இடுவர். அந்த வகையில் நாம் இடுகின்ற தகவல்களானது பார்ப்பவர்களுக்கு உதவுகின்ற வகையில் அமைந்திருக்க வேண்டும். அதற்கு நம் வலைத்தளம் எந்த துறை சார்ந்த தகவல்களை அடக்கியது என்பதுவே முக்கியமாக அமைகிறது.

எந்த துறையை தேர்வுசெய்வது?

பெரும்பாலானவர்கள் எந்த துறைசார்பாக அதிகளவு வலைத்தளங்கள் காணப்படிகின்றதோ அதுபோலவே தாமும் அமைத்துவிடுகின்றனர். இவ்வாறு அமைத்துவிட்டு சிறிதுகாலம் சென்றதும் புதிதாக என்ன தகவலை இடுவது என்று தெரியாமல்  மற்றவர்களை காப்பி அடிக்கும் நிலமை வராமல் இருக்கவே நான் ஒரு ஐடியா வைத்திருக்கிறேன்.  அதாவது நீங்கள் ஒவ்வொருவரும் என்ன தொழில் செய்கிறீர்களோ அது சார்பாகவே உங்கள் வலைத்தளத்தயும் அமைத்திடுங்கள்! உதாரணமாக நீங்கள் ஒரு விஞ்ஞான பாட ஆசிரியராக இருந்தால் விஞ்ஞானம் சார்பான உயிரியல், பௌதீகவியல், இரசாயனவியல் சார்பான தகவல்களை தினமும் இடலாம். இது உலகிலுள்ள மாணவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயன்படக்கூடியதாக இருக்கும்.(இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் என்ன வேலை செய்பவர்?) நீங்கள் கணினி சார்ந்த தொழில் செய்பவராக இருந்தால் அதுசார்பான வலைத்தளத்தை ஆரம்பிக்கலாம்.

இந்த வழிமுறை மூலம் தம்மிடம் உள்ள புதிய விடையங்களை எல்லோர்க்கும் பயன்படுமாறு பகிர்ந்திடலாம். இங்கு தெரிந்தவற்றை மட்டும் சுயமாக இடுவதால் மற்றவர்களை காப்பி அடிக்கவேண்டிய தேவை ஏற்படாது.

Sunday, July 18, 2010

Google Earth மென்பொருளை இணைய இணைப்பு இல்லாத கணினியிலும் பயன்படுத்தலாம்

Google Earth மென்பொருளானது எல்லோரும் அறிந்ததே இந்த மென்பொருளைப் பயன்படுத்தவதாயின் இணைய இணைப்பு அவசியமாகும். இணைய இணைப்பு இல்லாதகணினிகளில் Google Earth மென்பொருளை Install செய்தாலும் பயன்படுத்த முடியாது.

    உங்கள் அலுவலகத்தில் இருக்கும் கணினியில் இணைய இணைப்பு இருக்கும் ஆனால் அங்கு Google Earth இல் சுதந்திரமாக பயன்படுத்த நேரம் இருக்காது. இப்படியானவர்களுக்கு Google Earth மென்பொருளை இணைய இணைப்பு இல்லாத கணினியிலும் பயன்படுத்த ஒரு வழி இருக்கிறது. அதுதான் Cache Memory. இந்த Cache Memory இனை Copy செய்து உங்கள் இணைய இணைப்பு இல்லாத கணினியில் Past செய்வதன் மூலம் நீங்கள் Copy செய்த Cache Memory எவ்வளவு உள்ளதோ அதற்கேற்ப பயன்படுத்தலாம்.

இந்த Cache Memory இனை எப்படி Copy செய்வது இது எங்கு இருக்கும்?

முதலில் உங்கள் அலுவலகத்தில் இருக்கும் கணினியில் அல்லது Internet Browsing Center இற்குச் சென்று Google Earth இனை Download செய்து Install செய்து கொள்ளுங்கள். இப்பொழுது Google Earth மூலம் உங்களுக்குத் தேவையான இடங்களை ஒரு தடவை Zoom செய்யுங்கள் (நீங்கள் இப்பொழுது பார்க்கும் இடங்களே Cache Memory இல் பதியப்படுகின்றன.) இனி Streaming 100% என்று முடிந்ததும் Google Earth இனை Close செய்துவிட்டு.


    கணினியில் My Computer இனை Open செய்து Tools > Folder Options... > View > Show Hidden File And Folders என்பதை Select செய்து OK  இனை அழுத்தவும். (இது கணினியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள Folder களை காட்சிப்படுதுவதற்கான முறையாகும்.)

    இனி C:\Documents and Settings\"USER" என்ற இடத்திற்குச் செல்லவும் அங்கு  முதலில் Local Settings என்ற Folder இனுள் Application Data\Google\GoogleEarth என்ற Folder இனுள் உள்ள அனைத்து File, Folder களையும் அப்படி உங்களிடமுள்ள Pendrive இல் Copy செய்யவும். அடுத்து  மீண்டும் C:\Documents and Settings\"USER" இற்கு வந்து Application Data என்ற Folder இனுள் Google\GoogleEarth என்ற இடத்திற்கு வந்து அங்குள்ள அனைத்து File களையும் Pendrive இல் Copy செய்யவும்.


    இனி உங்கள் வீட்டிலுள்ள கணினியில் (இணைய இணைப்பு இல்லாத கணினியில்) Google Earth இனை Install செய்யவும். நீங்கள் Pendrive இல் Copy செய்த File களை உங்கள் கணினியில் முறையே அந்த அந்த சரியான இடங்களில் Past செய்யவும். இப்பொழுது Google Earth இனை Open செய்து பார்க்கவும் நீங்கள் அங்கு Cache Memory யில் இருந்து Copy செய்துவந்த அனைத்து இடங்களையும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

இது நான் எனது கணினியில் பரிசோதித்து வெற்றிகரமாக வேலைசெய்கிறது.
இந்த பதிவில் ஏதாவது சந்தேகம், பிரச்சினைகள் இருந்தால் தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

Google Earth Offline Installer (Full Setup File) இனை Download செய்ய இங்கு Click செய்யவும்.

Monday, July 12, 2010

விரைவாக தமிழில் Type செய்வதற்கு சிறந்த மென்பொருள்

இந்த மென்பொருள்மூலம் (Azhagi) இலகுவாக Unicode முறையில் தமிழில் மின்னஞ்சல் களை அனுப்பலாம். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத், ஒரியா ஆகிய பல மொழிகளில் Unicode முறையில் Type செய்யமுடியும்.

Azhagi மென்பொருளிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் Type செய்யும் தகவலை Type செய்து Copy-Past செய்யத் தேவைஒன்றும் இல்லை. Shortcut Key ஆக F10 இனை அழுத்தினால் தமிழிலும் மீண்டும் F10 இனை அழுத்தினால் ஆங்கிலத்திலும் Type செய்யமுடியும்.

இந்த மென்பொருளை நீங்கள் Facebook, Blogger, Email, Google Search ஆகியபல இடங்களிலும் பயன்படுத்திடலாம்.

இலவசமாக Download செய்திட இங்கு Click செய்யவும்

Sunday, July 11, 2010

தகவல்களை இலகுவாகவும் பாதுகாப்பாகவும் Upload செய்யக்கூடிய தளம்

உங்களிடம் இருக்கும் மென்பொருட்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் என அனைத்து தகவல்களையும் இணையத்தில் Upload செய்துவிட்டால் நீங்கள் செல்லும் இடமெல்லாம் சீடியிலோ, பெண்டிரைவிலோ பதிந்துசெல்லவேண்டிய அவசியம் இருக்காது நீங்கள் பயன்படுத்தப்போகும் கணினியில் இணையைஇணைப்பு இருந்தால் போதும் இலகுவாக உங்கள் தகவல்களைப் பெற்றிடலாம். 

மேலும்  அதிக அளவுள்ள தகவல்களை மின்னஞ்சல் செய்ய இந்த தளத்தில் Upload செய்ய்துவிட்டு அதற்கான Link இனை கொடுப்பதன்மூலம் தகவலை இலகுவாக பகிர்ந்திடலாம்.


இந்த இணையத்தளத்தின் முகவரி http://www.mediafire.com

புதிதாக கணக்கை உருவாக்கிட http://www.mediafire.com/register.php

Friday, July 9, 2010

Windows XP யை Windows 7 ஆக்கலாம்

நீங்கள் இன்னும் XP யையே பயன்படுத்திக்கொண்டிருகிறீர்களா?
உங்களுக்கும் Windows 7 இயங்குதளத்தை பயன்படுத்தவேண்டும் என்ற ஆசை இருந்தும் Windows 7 இற்கு தேவையான வன்பொருள் குறைபாட்டாலோ அல்லது Windows 7 சில வன்பொருட்களை Support செய்யாத காரணத்தினாலோ XP யையே பயன்படுத்துபவரா நீங்கள்?

உங்களுக்காகவே இலவசமாகக் கிடைக்கிறது Windows XP யை Windows 7 போல காட்சியளிக்கச்செய்யும் Themes.

இலவசமாக Download செய்ய இங்கு Click செய்யவும்
[Install செய்யும் முறை அறிவதற்கு"How to install" என்னும் கோப்பினை பார்க்கவும்.]

Friday, July 2, 2010

உள்வரும் மின்னஞ்சல்களை குறித்த Folder இனுள் விழச்செய்தல்

பெரும்பாலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் Inbox இலே காணபடும். Facebook, Feed Burner மூலம் பெறப்படும் மின்னஞ்சல்கள், நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் என எல்லாமே ஒன்றாக காணப்படும் இது நாம் மின்னஞ்சல்களை இலகுவாக ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு சிரமமிலாமல் குறித்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் மின்னஞ்சல்களை வேறு வேறாக குறித்த Folder இனுள் விழச்செய்யும் வசதி Yahoo, Gmail போன்றவற்றில் உள்ளது.

Yahoo வில் Folder அமைப்பதற்கு முதலில் Folders என்னும் பகுதியில் உள்ள Add என்பதை அழுத்தவும் தோன்றும் Folder இற்கு விரும்பிய பெயரைக்கொடுக்கவும். இப்பொழுது Inbox இல் உள்ள குறித்த மின்னஞ்சலை Open செய்யவும் Action என்பதை Click செய்யவும் தோன்றும் Menu வில் Filter Emails Like This... என்பதை Click செய்யவும் Add Filter என்னும் Menu வில் உள்ள Then Move the message to: என்பதன் கீழ் உள்ள -Choose Folder- என்பதில் நீங்கள் Add செய்த Folder இனை Select செய்து Save என்பதை Click செய்ததும் தோன்றும் Menu விற்கு OK என்பதை Click செய்யவும்.

Gmail இல் இதனை செய்வதற்கு மின்னஞ்சலை Select செய்து More actions என்பதை Click செய்யவும் அதில் உள்ள Filter messages like these என்பதை Click செய்ததும் Next step என்பதை Click செய்யவும் Skip in inbox என்பதையும் Apply the label என்பதையும் select செய்து Choose Label என்பதில் new label என்பதை கொடுத்து label இற்கான பெயரையும் கொடுத்து ஒகே இனை கொடுத்து Create Filter என்பதை அழுத்தவும்.

இனி நீங்கள் தெரிவுசெய்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் அனைத்து மின்னஞ்சல்களும் நேரடியாக நீங்கள் Add செய்த Folder இனுள்ளேவரும்.இனி உங்கள் Inbox தெளிவாகவும் மின்னஞ்சல்களை இலகுவாகப் படிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
Related Posts with Thumbnails