Thursday, July 5, 2012

மின்சாதனங்கள் இணைப்பு முறை

பல்ப், மின்விசிறி, ரேடியோ, டிவி, மோட்டர் இவையெல்லாம் மின்சாதனங்களாகும். இச் சாதனங்கள் மின்தொடுப்பின் இரு முனைகளிலும் இணைக்கப்படுகின்றன.இவ் இணைப்புக்கள் இரணடு வகைப்படும் அவை

பேரல்லஸ் முறையில் மின்சாதனங்கள்

ஒருசோர்ஸின் இரு முனைகளிலும் மின்சாதனங்கள் இரு முனைகளையும் இணையாகவே இணைக்கும் முறையைத்தான் பேரல்லஸ் இணைப்பு முறை என்கிறோம்.  ஒரு இணைப்பை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் 100 வோல்ட், 1000 மில்லி அம்பியர் கொடுக்ககூடிய சோர்ஸ் (மின்கலம்) எனக்கொள்ளலாம். இதிலிருந்து வெளிவரும் இருமுனைகளின் கடைசி வரை 100 வோல்ட் மின்னழுத்தம் இருக்கும்.

ஆகவே அதில்
100V 50MA  பல்ப்
100V 100MA ரேடியோ
100V 200MA மின்விசிறி
100V 500MA அயன் பொக்ஸ்
100V 100MA பல்ப்2  ஆகியவற்றை இணைக்கலாம்.

இப்படி இணைக்கும் போது இணைக்கும் சாதனங்கள் 100 வோல்டில் இயங்கும் சாதனங்களாகவே இருக்க வேண்டும். ஆனால் அந்த சாதனங்கள் எடுக்கும் அம்பியரின் அளவு வெவ்வேறாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம்.  இங்கு 950 மில்லி அம்பியர்  லோட் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இதற்கு மேலாக லோட் எதுவும் இணைக்கக் கூடாது. இணைத்தால் மின்கலம் விரைவாகக் கெட்டுவிடும்.
நமது வீடுகளிலெல்லாம் மேலகாட்டப்பட்ட முறையில்தான் இணைப்புக்கொடுப்பார்கள்.  வீடுகளில் இணைக்கும் சாதனங்கள் எல்லாம் 230 வோல்ட் மின்னழுத்தத்தில் வேலைசெய்யக் கூடியனவாகவும் ஆனால் வெவ்வேறு அம்பியர்களை எடுக்கக் கூடியனவாகும் இருக்கும். எல்லா சாதனங்களும் எடுக்கும் அம்பியரின் அளவைப்பார்த்தால் மீட்டர் வினியோகிக்கும் அம்பியர் அளவின் 90% வரை இருக்கலாம். (மின்சார நிலையத்திலிருந்து கிடைக்கும் சிங்கிள் பேஸ் கரண்டில் 40 அம்பியர் கிடைக்கிறது)


Wednesday, July 4, 2012

ஓம்ஸ் விதி Ohm's Law

ஒரு நீர்த்தொட்டியில்  1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி நேரத்தில் 50லீட்டர்  அல்லது 100 லீட்டர் என்ற அளவில்தான் விழும். இப்படு விழும் தண்ணீரின் அளவு தரை மட்டத்திலிருந்து தொட்டி அமைந்திருக்கும் உயரம், நீர் செல்லும் குழாயின் பருமன், நீரின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. அதுபோல  ஒரு மின்கலததில் 50 அம்பியர் கரண்ட் உள்ளது என்றால் இணைப்பை இணைத்ததும் அவ்வளவு கரண்டும் அப்படியே வந்துவிடாது அதில் 10, 20 அல்லது 30 அம்பியர் மின்னோட்டம் தான் பாயும். இப்படியாக ஓடும் மின்னோட்டத்தின் அளவு எவ்வளவாக இருக்கும் என் நிர்னயிக்க கூடிய  விதிதான் ஓம்ஸ் விதி எனப்படுகிறது. "சர் ஜார்ஜ் சௌமன் ஓம்" என்ற இத்தாலி நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி கண்டுபிடித்தார். அதனால் இந்த விதிக்கு அவர் பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறது. இது உலகரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாகும்.

ஒரு மின் சர்கியூட்டில் ஓடும் மின்னோட்டத்தின் அளவு மின்கலம் வினியோகிக்கும் மின்னழுத்தமாகிய ஓல்டிற்கு நேர் விகிதாசாரத்தில் அமையும். அதாவது மின்னழுத்தம் கூடக் கூட மின்னோட்டமும் அதிகரிக்கும். இரண்டாவதாக இணைக்கப்படும் லோடின் ரெஸீஸ்ரன்ஸ் (ஓம்ஸ்) இற்கு ஏற்ப எதிர் விகிதாசாரமாக அமையும். அதாவது ரெஸீஸ்ரன்ஸ் அதிகமாக ஆக மின்னோட்டத்தின் அளவு குறையும்.  நீங்கள் சைக்கிளில் போகும் பொழுது அதன் வேகம் நீங்கள் கொடுக்கும் பெடலிங் செய்யும் அளவிற்கு ஏற்ப குறையும் அல்லது கூடும்.  எதிர் கற்றின் வேகத்திற்கு ஏற்ப சைக்கிளின் வேகம் குறையும் அல்லது கூடும். நேர் விகிதாசாரம் என்றல் பெருக்க் வேண்டும் எதிர் விகிதாசாரம் என்றால் பிரிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.
 மேலே கொடுக்கப் பட்ட படத்தில் ஓமின் விதி கொடுக்கப்பட்டுள்ளது. R என்பது தடை, V என்பது வோல்ட், I என்பது மின்னழுத்தம், P என்பது மின்சக்தி ஆகும்.

Tuesday, July 3, 2012

ஓல்ட்-அம்பியர்-வாட் என்றால் என்ன?

ஒரு கம்பியின் ஆரம்ப முனையில் எலக்ரோன்களைத் தள்ளினால் அடுத்துள்ள அணுக்கள் அவ்வெலக்ரோன்களைத் தள்ளிக்கொண்டே போகும். அதற்கு முதலில் எலக்ரோன்களை நாம் தள்ள வேண்டும். அப்படி தள்ளுவதற்கு ஒரு போஸ் கொடுக்க வேண்டும். இப்படி எலக்ரோன்களை அசைத்துத் தள்ளுவதற்காக நாம் கொடுக்கும் போர்ஸ் (Electro Motive Force EMF) என்று சொல்வர்.
மேலே காட்டப்பட்ட படத்தில் + முனையில் போஸ் தள்ளப்பட்டதும் கோடிக்கணக்கான எலக்ரோன்கள் பல்ப் வழியாக்ச் சென்று  - முனையை அடைகின்றன. இப்படி கொடுக்கும் போஸ் இன் அளவு கொஞ்சமாக இருக்கலாம் அதிகமாகவும் இருக்கலாம். அந்த போஸ் இனை அளக்க ஓர் அளவு வேண்டும் அந்த அளவு தான் வோல்ட் ஆகும். இதன் அடையாளம "V" ஆகும்.

  1. சாதாரன சுவர்கடிகார மின்கல வோல்ட் அளவு 1.5V ஆகும். 
  2. சைக்கிள் டைனமோ 6 ஓல்ட் அல்லது 12 வோல்ட்
  3. வீடுகளில் பயன் படுத்தும் மின்சார அளவு 250 வோல்ட் வரை இருக்கும்.
  4. சில த்ரீ பேஸ் மோட்டர்களுக்கு வேண்டிய வோல்ட் 440 ஆகும்.

இப்படியாக மனிதனால் இயக்கப்படும் சாதனங்களுக்கு தேவையான வோல்ட் 1.5 இலிருந்து 1.5 லட்சம் வரை தேவைப்படுகிறது. இயற்கையாகவே இடி மின்னல் ஏற்படும் பொழுது பல லட்ச ல்ட்சக்கணக்கான ஓல்ட் மின்னழுத்தம் உண்டாகிறது.
மின்கலத்தின் பொசிட்டிவ் முனைக்கும் நெகட்டிவ் முனைக்குமாக மேலே காட்டப்பட்ட வோல்ட் மீட்டர் கருவியைப் பயன்படுத்தி இணைக்கலாம்.

இப்படி ஒரு மின்னழுத்தத்தை கொடுத்தது எலக்ரோன்கள் தள்ளப்பட்டதும் அவைகள் கம்பி வழியாக + இலிருந்து - இற்குச் செல்கின்றன. இந்த எலக்ரோன்களின் ஓட்டத்தத்தைத் தான் மின்னோட்டம் என்றும் (கரண்ட்) என்றும் சொல்கிறோம். அப்படியானால் எவ்வளவு கரண்ட் ஓடுகிறது என்பதையும் தெரியவேண்டியிருக்கிறது. கரண்டின் அளவு எலக்ரோன்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. அப்படியானால் இந்த அளவை இத்தனை கோடி எலக்ரோன்கள் என்று சொல்லலாம், என்றாலும் இது கணக்கிடும் வகைக்கு ஏற்றதாக இருக்காது. ஆகவே இதை அளக்க "அம்பியர்" என்ற அளவு பயன்படுத்தப்படுகிறது, ஒரு கம்பியில் ஒரு அம்பியர் கரண்ட் பாய்கிறதென்றால் அதன் வழியாக 628 000, 000, 000,000,000,0 எலக்ரோன்கள் ஓடுகின்றன. அதாவது 628 கோடி கோடி எலக்ரோன்கள் ஓடுகின்றன.

இவளவு எலக்ரோன்கள் ஒரு கம்பியின் வழியாகப் பாய்வதக இருந்தால் இணைக்கப்படும் "A" என்ற அம்மீட்டர் 1 என்ற அவைக் காண்பிக்கும்.

 மின்கலத்துடன் இணைப்பை இணைத்ததும் பல்ப் வழியாக எலக்ரோன்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.  இப்படியாக மின்சாரம் ஒரு வினாடியில் ஓடும் மொத்த எலக்ரோன்களின் எண்ணிக்கையைத்தான் எலக்ரிக் பவர் என்றும் மின்சக்தி என்றும் சொல்கிறோம். இதன் அளவைத்தான் வாட் என்கிறோம். அதாவது இணைக்கப்பட்டிருக்கும் பல்ப் மொத்தம் எவ்வளவு மின்சக்தியை ஒரு வினாடியில் எடுத்திருக்கும் அல்லது மின்கலம் எவ்வளவு எலக்ரோன்களை ஒரு வினாடியில் கொடுத்திருக்கும் என்பதைத்தான் வாட்ஸ் என்கிறோம். எவ்வளவு வாட்ஸ் என்பது கொடுக்கும் மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் நேர்விகிதாசாரமாகும். ஆகவே மின்சக்தியைக் கணக்கிட மின்னழுத்தத்தையும் மின்னோட்டத்தையும் பெருக்கிப் பார்க்க வேண்டும்.

1000 வாட்ஸ் ஒரு யூனிட் ஆகும். அதாவது ஒரு 100 வாட் பல்ப் 10 மணி நேரம் வேலை செய்தால் 1 யூனிட் ஆகும் அல்லது 1000 வாட்ஸ் கீட்டர் ஒரு மணி நேரம் வேலை செய்தால் 1 யூனிட் செலவாகும் எனக்கொள்ளலாம்.  அல்லது 10 வோல்டும் 10 அம்பியரும் கொடுக்கக் கூடிய மின்கலத்தில் 100 வாட்ஸ் பல்பை தொடர்ச்சியாக 1 மணி நேரம் எரிய விடலாம் அல்லது 50 வாட்ஸ் பல்பை இரண்டு மணி நேரம் எரிய விடலாம்.







Monday, July 2, 2012

பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர்

ரெஸிஸ்ரரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்ரர்தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்ரர் ஆகும். இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன்ரோல், பேஸ்-ட்ரிபிள் கன்ரோல், என்றும் டிவி களில் பிரைட்னெஸ் கன்ரோல், கொன்ராஸ்ட் கன்ரோல் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

  இதில் மூன்று முனைகள் இருக்கும். இறுதியாக உள்ள முனைகளுக்கிடையே ரெஸிஸ்ரரின் தன்மை  ஸ்திரமாக அமைக்கப்பட்டிருக்கும். முனை அந்த ஸ்திரமான ரெஸிஸ்ரர் பக்கத்தில் தொட்டுக்கொண்டே இருக்கும். இதன் மூலம் அஜஸ்ட் செய்து ரெஸிஸ்ரரின் மதிப்பில் என்ன அளவு வேண்டுமோ அதை பெற்றுக்கொள்ளலாம். இந்த ரெஸிஸ்ரர்களின் மதிப்பு 5ஓம் இலிருந்து 10 லட்சம் ஓம்ஸ் வரை கிடைக்கின்றன.

இந்த ரெஸிஸ்ரர் களில் இரண்டு வகை இருக்கின்றன.
  1. லீனியர் டைப்
  2. லொக் டைப் (Log Type)
 லீனியர் டைப் என்றால் இதன் தடை தன்மை சம தூரத்தில் சம அளவிலேயே கூடிக்கொண்டே போகும். லொக் டைப் (Log Type) இல் சம தூரத்தில் தடை தன்மை லொக் அளவில் கூடிக்கொண்டே போகும். (லொக் அளவு என்பது 10 மடங்கு விகிதாசாரத்தில் அதிகரிக்கும்). ரெஸிஸ்ரரின் மதிப்பு சம தூரத்தில் 100ஓம்-1000ஓம்-10,000ஓம்-1 லட்சம் ஓம்-10 லட்சம் ஓம் என பத்து மடங்கு விகிதாசாத்தில் அதிகரிக்கும். நமது காதின் அமைப்பில் ஒரு அதிசய குணம் ஒன்று உள்ளது. ஒரு சத்தத்தின் அளவை 1 மடங்கிலிருந்து 2 மடங்காகக் கேட்கவேண்டுமானால் அச்சத்தத்தை உண்டுபண்ணும் சத்தக்கருவி உற்பத்தி செய்யும் அளவை 10 மடங்காக அதிகரிக்க வேண்டும். 3 மடங்காக கேட்கவேண்டுமானால் சத்த அளவை 100 மடங்காக அதிகரிக்க வேண்டும்.  உதாரணமாக 100 வாட்ஸ் ஸ்பீக்கரில் பாடல் ஒலித்தால் அதனை இரண்டு மடங்காக கேட்க 300 வாட்ஸ் வரை அதிகரிக்கவேண்டும். இதனையே லொக் ஸ்கேல் எங்கின்றனர். இவ்வாறில்லாமல் 200 வாட்ஸ் என்றாலேயே நம்காதால் இரண்டுமடங்கு சத்தத்தை நம் காதால் கேட்ககூடியவாறு இருந்திருக்குமானால் கொழும்பில் உண்டாகும் சத்தத்தை யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் கேட்க நேரிடும்! லொக் ஸ்கேல் அடிப்படையில் நம் காதை அமைத்த ஆண்டவனை வணங்குவோம் ஏன் எனில், அருகில் இருப்பவர் கதைப்பது எவ்வாறு கேட்கும் யோசித்துப்பாருங்கள்?

ஒரு ரேடியோவில் உள்ள நிகழ்ச்சிகளை காதின் லொக் ஸ்கேல் இற்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ இந்த இரண்டாவது வகை ரெஸிஸ்ரரை தான் பயன்படுத்த வேண்டும். லீனியர் டைப் பயன்படுததினால் இரு குறிப்பிட்ட தூரம் வரை சத்தம் கூடும் அதன் பின் வித்தியாசத்தை எம்மால் உணர முடியாது.

Sunday, July 1, 2012

கார்பன் ரெஸிஸ்ரர்கள்

கார்பன் ரெஸிஸ்ரர்கள் மிகவும் சிறிதாகவே இருக்கும்.  ஆனால் அவற்றின் மதிப்பு 10 கோடி ஓம்ஸ் வரை இருக்கும். இதில் "கார்பன்"(கரி) மிகவும் பிரதானமான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது, 102 மூலப் பொருட்களில் காபன் 6 என்ற அணு எண்ணைக் கொண்ட எலிமென்ட் ஆகும். ஒரு மண்ணெணை விளக்கிலிருந்து வரும் புகையை ஒரு கண்ணாடியில் படும்படி வைத்துக்கொண்டால் அந்தப் புகைப்படலம் ஒரு நல்ல கார்பனாக அமையும். இதோடு சிறிதளவு கண்ணாடி, பேக்லைட் சேர்த்துவிட்டால் அது ஒரு நல்ல கார்பன் ரெஸிஸ்ரராக அமைந்துவிடும். கார்பன் ரெஸிஸ்ரர்கள் 0.25, 0.5, 1, 5 வாட் வரை கிடைக்கின்றன. இவற்றின் மதிப்பு அப்படியே அதன் மேல் 100ஓம், 1000ஓம் என குறிப்பிடப்படுவதில்லை. அதற்கு பதிலாக பல வண்ணங்களில் ஒரு ஓரமாக 3 மோதிரங்கள் போல் கோடிட்டு அதன் மதிப்பை தெரிவிக்கிறார்கள்.

 முதல்  மூன்று வளையங்கள் தான் அதன் மதிப்பைத் தெரிவிக்கும் அதனை அடுத்துள்ளவை தங்கக் கோடு 5%  அல்லது வெள்ளிக்கோடு 10%. இதை "டாலரன்ஸ் கலர்"  என்றும் சொல்வர்.
உதாரணத்துடன் பல ரெஸிஸ்ரர்கள்  மதிப்பை எப்படி கணக்கிடுவது என கவனியுங்கள். முதல் வட்டம் என்ன என கவனியுங்கள். அந்த வண்ணத்திற்குரிய எண்ணை அந்த ரெஸிஸ்ரரின் முதல் அளவாகவும், மூன்றவது வண்ணத்திறகுரிய எண்ணிற்கு ஏற்ப முதல்  இரு எண்களையும் அடுத்து அத்தனை பூஜ்யங்களையும் சேர்த்து மொத்தமாக பார்த்து அறிந்து கொள்ளவேண்டியதுதான்.

முதல் வட்டம் சிகப்பு வண்ணமாக இருந்தால் 2என குறிக்கவும், 2வது வட்டம் பச்சை வண்ணமாக இருந்தால் அதற்குரிய எண் 5யும் சேர்த்துக்கொண்டால் 25 என்று ஆகிவிடும். அதை அடுத்து 3வது வண்ணமாக ஒரேஞ்ச் இருந்தால் அத்ற்கேற்ப மூன்று பூஜ்யங்களை சேர்துதுக்கொண்டால் 25,000ஓம்ஸ் என கிடைத்துவிடும். ஆயிரம் என்ற எண்ணை மெற்றிக் முறையில் கிலோ என சொல்கிறோம். ஆகவே இதன் தடை மதிப்பு 25K ஓம்ஸ் ஆகும்.

எந்த ரெஸிஸ்ரரிலும் முன்னும் பின்னும் கறுப்பு வண்ணம் இருந்தால் அத்ற்கு மதிப்பு எதுவும் கொடுக்காமல் நடுவிலுள்ள வண்ணத்திற்குரிய மதிப்பை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது 11 ஓமிலிருந்து 99ஓம் வரை உள்ள இரு ஸ்தான் மதிப்புள்ள ரெஸீஸ்ரர்களின் கடைசி வண்ணம் கறுப்பாகவும், 1லிருந்து 9 ஓம் வரையுள்ள ஒரு ஸ்தானரெஸிஸ்ரர்களில் மதிப்பு முதல் வண்ணமும் கடைசி வண்ணமும்  கறுப்பாக இருக்கும்.

சில ரெஸீஸ்ரர்களீல் கடைசி வண்ணம் வண்ணமாக இருப்பதற்கு பதிலாக வெள்ளி அல்லது தங்க வளையம் இடப்பட்டிருக்கும். இது வெள்ளியாக இருந்தால் முதல் இரு வளையங்களிக்குரிய மதிப்பை 100 ஆல் வகுத்து கொள்ள  வேண்டும். தங்கமாக இருந்தால் முதல் இரு வளையங்களுக்குரிய மதிப்பை 10ஆல் வகுத்துக் கொள்ளவும்.

தங்ககோடோ வெள்ளி  கோடோ இல்லாமல் காலியாக விடப்பட்டிருந்தால் அதன் மதிப்பு 20% கூடும் அல்லது குறையும் என்று பொருள்.
Related Posts with Thumbnails