Tuesday, December 13, 2011

Telnet என்பது யாது? இது எங்கு பயன்படுகிறது?

இது வலையமைப்பில் மிக முக்கியமன ஒரு பாதைவழி ஆகும் (Network Protocol). இது இணையத்தளத்திலும் சாதாரண வலையமைப்பிலும் எழுத்து வடிவிலான செயற்பாட்டுக் கட்டளைகளையும் தகவலையும் பரிமாற்றிக்கொள்வதற்கு பயன்படுகிறது.


இதன் மூலம் ஒரு தடவையில் 8 Byte தகவலை அனுப்ப மற்றும் பெற முடியும் (இணையம் ஆனாலும் சரி வலையமைப்பு ஆனாலும் சரி அனைத்துவகை தகவல் தொடர்பும் TCP [ Transmission Control Protocol ] முலம் பரிமாற்றப்படுகிறது).  Telnet ஆனது 1969 இல் அறிமுகப்படுத்தப்பட்டது இது Internet Engineering Task Force  (IETF) எனும் பிரிவினுள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஆரம்ப காலங்களில் CMD (command method) மூல்மாகவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாகவும் GUI மென்பொருள் வளர்ச்சியின் காரணமாகவும் CMD பாவனை காலப்போக்கில் குறைவடைந்து தற்பொழுது Server இலிருந்த் தகவலை பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக Client கணினிகளில் செயற்படுகிறது. 

Telnet ஆனது கீழ் வரும் பயன்பாடுகளில் பிரபலமாக உள்ளது:
  • எமது கணினியில் இருந்து Host/Server இணை அணுகுவதற்கு. 
  • வலையமைபில் கணினிகளை முகாமைத்துவப்படுத்துவதற்கு
  •  மின்னஞ்சலை கையாள்வதற்கு.

No comments:

Post a Comment

Thank You!
Please Follow Me.
Mobile 0750383595

Related Posts with Thumbnails