Wednesday, July 4, 2012

ஓம்ஸ் விதி Ohm's Law

ஒரு நீர்த்தொட்டியில்  1000 லீட்டர் நீர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம் அதனைத்திறந்துவிட்டால் அவ்வளவு நீரும் அப்படியே வந்துவிடாது. ஒரு மணி நேரத்தில் 50லீட்டர்  அல்லது 100 லீட்டர் என்ற அளவில்தான் விழும். இப்படு விழும் தண்ணீரின் அளவு தரை மட்டத்திலிருந்து தொட்டி அமைந்திருக்கும் உயரம், நீர் செல்லும் குழாயின் பருமன், நீரின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. அதுபோல  ஒரு மின்கலததில் 50 அம்பியர் கரண்ட் உள்ளது என்றால் இணைப்பை இணைத்ததும் அவ்வளவு கரண்டும் அப்படியே வந்துவிடாது அதில் 10, 20 அல்லது 30 அம்பியர் மின்னோட்டம் தான் பாயும். இப்படியாக ஓடும் மின்னோட்டத்தின் அளவு எவ்வளவாக இருக்கும் என் நிர்னயிக்க கூடிய  விதிதான் ஓம்ஸ் விதி எனப்படுகிறது. "சர் ஜார்ஜ் சௌமன் ஓம்" என்ற இத்தாலி நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி கண்டுபிடித்தார். அதனால் இந்த விதிக்கு அவர் பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறது. இது உலகரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாகும்.

ஒரு மின் சர்கியூட்டில் ஓடும் மின்னோட்டத்தின் அளவு மின்கலம் வினியோகிக்கும் மின்னழுத்தமாகிய ஓல்டிற்கு நேர் விகிதாசாரத்தில் அமையும். அதாவது மின்னழுத்தம் கூடக் கூட மின்னோட்டமும் அதிகரிக்கும். இரண்டாவதாக இணைக்கப்படும் லோடின் ரெஸீஸ்ரன்ஸ் (ஓம்ஸ்) இற்கு ஏற்ப எதிர் விகிதாசாரமாக அமையும். அதாவது ரெஸீஸ்ரன்ஸ் அதிகமாக ஆக மின்னோட்டத்தின் அளவு குறையும்.  நீங்கள் சைக்கிளில் போகும் பொழுது அதன் வேகம் நீங்கள் கொடுக்கும் பெடலிங் செய்யும் அளவிற்கு ஏற்ப குறையும் அல்லது கூடும்.  எதிர் கற்றின் வேகத்திற்கு ஏற்ப சைக்கிளின் வேகம் குறையும் அல்லது கூடும். நேர் விகிதாசாரம் என்றல் பெருக்க் வேண்டும் எதிர் விகிதாசாரம் என்றால் பிரிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.
 மேலே கொடுக்கப் பட்ட படத்தில் ஓமின் விதி கொடுக்கப்பட்டுள்ளது. R என்பது தடை, V என்பது வோல்ட், I என்பது மின்னழுத்தம், P என்பது மின்சக்தி ஆகும்.

5 comments:

  1. Definition: வெப்ப நிலை போன்ற பெளதிக காரணிகள் மாறாது உள்ள போது மின்னோட்டம் அழுத்த வேறு பாட்டிற்கு நேர் விகித சமன்

    ReplyDelete
  2. அருமையான விளக்கம்...நன்றி மணி (www.payilagam.com)

    ReplyDelete
  3. ரெசிஸ்டெர் உள்ள கலர் மதிப்பை வைத்து ohms kilo ohms mega ohm மாற்றுவது எப்படி உதாரணத்தோடு எஸ்பிளேன் பண்ணுங்க pls

    ReplyDelete
  4. பயணுள்ள தகவல் நன்றி சகோ...

    ReplyDelete

Thank You!
Please Follow Me.
Mobile 0750383595

Related Posts with Thumbnails