Saturday, January 28, 2012

அதிரவைக்கும் புதிய நினைவக தொழில்நுட்பம்

எம்மை அதிரவைக்கக்கூடிய புதிய தொழில்நுட்பம் சில  காலங்களில் வர இருக்கிறது. வர இருக்கும் இத் தொழில்நுட்பங்கள் RAM களில்லேயே மாற்றங்களை ஏற்படுத்தப்போன்றன. இதுவரை DDR3 வகைகளே பாவனையில் உள்ளன அடுத்த தலைமுறைக்கான DDR4 RAM கள் முன்னையவற்றைக்காட்டிலும் மிக அதிவேகமானதாகவும், அதிக கொள்ளளவை ஏற்கக்கூடியதாகவும் வெளிவார உள்ளன. இதுவரை வெளியாகிய Memory RAM  களிலிருந்து இயக்க முறையில் இவை முற்றிலும்  வேறுபட்டுக்காணப்படுகின்றன.

இவற்றின் நினைவகப்பகுதியில் Memristors (நினைவுகொள் மின்தடை) என்ற மின்னுறுப்பு பயன்படுத்தப்படுகிறது. இது 2008 இல் HP  நிறுவனத்தினால் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுவரை இலத்திரனியல் வரலாற்றில் அடிப்படையாக இருந்த Inductor, Resistor, capacitor என்ற மூன்று மின்னுறுப்புக்களே அடிப்படையாக இருந்தன தற்போது இது நான்காவது உறுப்பாகக்காணப்படுகிறது எனலாம். Resistor களில் கால நேர அளவில் மின்னோட்ட, மின்னழுத்தங்களீல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இவை உருவாக்கப்படுகின்றன. இதில் resistive memory தொழில்நுட்பம் அதிகம் பயன்படுவதனால் SDRAM நீக்கப்பட்டு RRAM (Resistive RAM) என மாற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொழில்நுட்பம் முதலில் RAM களிலேயே ப்பயன்படுத்தப்படுகிறது காரணம் இவை தற்காலிய நினைவகம் என்பதனாலே ஆகும். எனினும் விரைவில் பெண்டிரைவ் களிலும் SSD களிலும் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள DDR3 ரம்கள் 2400Mhz வேகத்தில் உள்ளன DDR4  4266 Mhz வேகத்தில் இயங்கக்கூடியது எனப்படுகிறது. மேலும் DDR3 ரம்கள் 32GB வரையே அதிகரிக்ககூடியதாகும் DDR4 அவற்றில் காட்டிலும் சக்திவாய்ந்ததாக காணப்படும். ஆனால் 2GB ரம்இலேயே நமது வேலைகளை தடங்கல் இல்லாமல் செய்யகூடியதய்  இருப்பினும் திரைப்பட தயாரிப்புக்களுக்கு இவை அதிரவைக்கும் ஒளி ஒலி வடிவங்களை உருவாக்குவதற்கு காரணமாக அமையும் என்பது உண்மையே. 

Friday, January 13, 2012

திரையை அளப்பதற்கு அடிமட்டம் மென்பொருள்

கணினியில் சில தேவைகளுக்காக  திரையை அளக்க வேண்டிய தேவை ஏற்படலாம். உதாரணமாக பேஜ்மேக்கர், போட்டோசோப், இணையத்தில் உலாவும் போது படங்களை அளத்தல் போன்ற தேவைகளின் போது வேலையை இலகுபடுத்த ஒரு நல்ல மென்பொருள்.
டவுன்லோட் செய்ய click Here!
Related Posts with Thumbnails