Sunday, May 9, 2010

மொடம்

மொடம் எனப்படுவது இணையத்தை பயன்படுத்துவதற்கு பயன்படும் ஒரு Device ஆகும். மொடம் ஆனது தொலைபேசியிலிருந்து வரும் அனலொக் சிக்னலை டிஜிடல் சிக்னலாகவும் கணினியில் இருந்து வரும் டிஜிடல் சிக்னலை அனலொக் சிக்னலாகவும் மாற்ற உதவுகிறது.


பொதுவாக மொடம் இரண்டு வகைப்படும் அவை:
Internal Modem
External Modem

Internal Modem ஆனது கணினியின் உள்ளே பொருத்தப்படுவது ஆகும். இது Mother Board இல் உள்ள PCI Slot இல் பொருத்தப்படும். இந்த வகை இன்டேர்னல் மொடம் கணினியின் உள்ளே பயன் படுத்துவதால் இடம் மிச்சப்படுகிறது. மொடத்திற்கு தனியாக மின்சாரமே செலுத்த வேண்டியதேவையும் இல்லை. பயன்படுத்தவும் இலகுவானது. ஆனால் இன்டேர்னல் மொடம் பயன் படுத்துவதால் சில தீமைகளும் உள்ளன. இவை பழுதடைந்து விட்டால் திருத்துவதற்கு கணினியையே கழற்ற வேண்டும். எமது தேவைக்கேற்ப மொடத்தினை வேறு கணினிக்கு இடம் மாற்றுவது கடினம்.
External Modem ஆனது கணினிக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும். இது விலை சற்று அதிகமாகும். இதனை இலகுவாக வேறு கணினிகளுக்கு இடம் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு தனியாக மின்சாரம் கொடுக்க வேண்டும்.





No comments:

Post a Comment

Thank You!
Please Follow Me.
Mobile 0750383595

Related Posts with Thumbnails