Saturday, May 15, 2010

கணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்

கணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்

கணினியை On செய்ததும் கணினி On ஆகாமல் இருத்தல்.
காரணம்:
கணினியில் இணைக்கப்பட்டிருக்கும் SMPS பழுதடைந்திருக்கல்லாம் அல்லது Power Buttion இல் ஏதேனும் பழுது ஏற்பட்டிருக்கலாம்.


கணினியை On செய்த பொழுது கணினி திரையில் ஏதேனும் நடவடிக்கையும் அற்றிருத்தல்.
காரணம்:
கணினியில் அதிகளவு வைரஸ் காணப்படாலாம், RAM பழுதடைந்திருக்கலாம், VGA பழுதடைந்திருக்கலாம் மேற்குறிப்பிட்ட காரணங்களால் தீர்வு கிடைக்காவிடின் Monitor பழுதாகிவிட்டது எனலாம்.

கணினியை On செய்தபொழுது கணினி தன்னிச்சையாக Restart ஆகுதல்.
காரணம்:
இணைக்கப்ப்ட்டிருக்கும் Hard Disk ஆனது சரிவர இணைக்கப்படாமல் இருக்கலாம் அல்லது அதிகளவு வைரஸ் காணப்படாலாம். இல்லையெனில் கணினி இயங்குவதற்கான System Files ஏதேனும் பாதிக்கப் பட்டிருக்கலாம் அல்லது அழிந்திருக்கல்லாம்.

கணினி On செய்ததும் "பீப்" ஒலி ஏற்படல்
காரணம்:
RAM பழுதடைந்திருக்கலாம், அதிக அளவு Dust காணப்படலாம் அல்லது Display Unit (VGA) பழுதடைந்திருகலாம்.

கணினியின் வேகம் குறைந்து காணப்படல்.
காரணம்:
குறைந்த வேலைத்திறன் மிக்க கணினியில் அதிகளவு வேலைகளை செய்ய முயலும் போது கணினியின் வேகம் குறைவடையும். அது மட்டுமின்றி அதிகளவு வைரஸ்கள் தாக்கமடையும் போதும் வேகம் குறைவடையும்.

CD-ROM தொழிற்படாமை.
காரணம்:
CD-ROM ஐ அதற்குரிய முறையில் கையாளாமை (சேதமடைந்த சீடி களை பயன் படுத்தல்), CD-ROM ஊடாக படங்களை நேரடியாக அதிக நேரம் பார்த்தல்.

No comments:

Post a Comment

Thank You!
Please Follow Me.
Mobile 0750383595

Related Posts with Thumbnails