Sunday, May 30, 2010

Network 2

A network is any collection of independent computers that communicate with one another over a shared network medium.

Friday, May 28, 2010

Network

Network எனப்படுவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கணினிகளை இணைப்பது ஆகும். Network இன்மூலம் தகவலை இன்னோர் கணினிக்கு அனுப்பலாம், பெற்றுக்கொள்ளலாம்.
நமது கணினியில் உள்ள Printer, CD- Drive போன்ற வன்பொருட்களை மற்றைய கணினியில் பயன் படுத்தக்கோடியவாறு அமைக்கலாம்.


Network ஆனது ஒரு குறித்த அறையினிலோ அல்லது அலுவலகத்திலோ அமைக்கப்படலாம்.

Saturday, May 15, 2010

கணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்

கணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்

கணினியை On செய்ததும் கணினி On ஆகாமல் இருத்தல்.
காரணம்:
கணினியில் இணைக்கப்பட்டிருக்கும் SMPS பழுதடைந்திருக்கல்லாம் அல்லது Power Buttion இல் ஏதேனும் பழுது ஏற்பட்டிருக்கலாம்.


கணினியை On செய்த பொழுது கணினி திரையில் ஏதேனும் நடவடிக்கையும் அற்றிருத்தல்.
காரணம்:
கணினியில் அதிகளவு வைரஸ் காணப்படாலாம், RAM பழுதடைந்திருக்கலாம், VGA பழுதடைந்திருக்கலாம் மேற்குறிப்பிட்ட காரணங்களால் தீர்வு கிடைக்காவிடின் Monitor பழுதாகிவிட்டது எனலாம்.

கணினியை On செய்தபொழுது கணினி தன்னிச்சையாக Restart ஆகுதல்.
காரணம்:
இணைக்கப்ப்ட்டிருக்கும் Hard Disk ஆனது சரிவர இணைக்கப்படாமல் இருக்கலாம் அல்லது அதிகளவு வைரஸ் காணப்படாலாம். இல்லையெனில் கணினி இயங்குவதற்கான System Files ஏதேனும் பாதிக்கப் பட்டிருக்கலாம் அல்லது அழிந்திருக்கல்லாம்.

கணினி On செய்ததும் "பீப்" ஒலி ஏற்படல்
காரணம்:
RAM பழுதடைந்திருக்கலாம், அதிக அளவு Dust காணப்படலாம் அல்லது Display Unit (VGA) பழுதடைந்திருகலாம்.

கணினியின் வேகம் குறைந்து காணப்படல்.
காரணம்:
குறைந்த வேலைத்திறன் மிக்க கணினியில் அதிகளவு வேலைகளை செய்ய முயலும் போது கணினியின் வேகம் குறைவடையும். அது மட்டுமின்றி அதிகளவு வைரஸ்கள் தாக்கமடையும் போதும் வேகம் குறைவடையும்.

CD-ROM தொழிற்படாமை.
காரணம்:
CD-ROM ஐ அதற்குரிய முறையில் கையாளாமை (சேதமடைந்த சீடி களை பயன் படுத்தல்), CD-ROM ஊடாக படங்களை நேரடியாக அதிக நேரம் பார்த்தல்.

BIOS இணை Reset செய்தல்

உங்களது கணினியின் Password மறந்து விட்டால் Mother Board இல் உள்ள Jumber Settings இணை மாற்றி அமைப்பதன் மூலம் அல்லது  BIOS இற்கான சிறிய Battery இணை 30 செக்கன்களுக்கு கழற்றி வைப்பதன் மூலம் BIOS இணை Reset செய்யலாம்.

30 செக்கங்களுக்குப் பிறகு Battery இணை அதற்குரிய இடத்தில் பொருத்தி விட்டு கணினியை Power On செய்யுங்கள். உங்கள் கணினி புதிதாக BIOS பொருத்தப்பட்டது போல் இயங்கத்தொடங்கும்.

Friday, May 14, 2010

Capture Card

Capture Card எனப்படுவது Digital Camera, DV Caset Camera மற்றும் CD Player, Caset Player களிலும் இருந்து எடுத்த video படங்களை கணினியில் பரிமாற்றுவதற்கு பய்னபடுகிறது. இது Mother Board இன் PCI Slot இல் பொருத்தப்படும். ஆனால் இப்பொழுது வரும் TV Tuner Card களிலும் Capture செய்யும் வசதியும் உள்ளினைந்தே உள்ளது.

Sunday, May 9, 2010

மொடம்

மொடம் எனப்படுவது இணையத்தை பயன்படுத்துவதற்கு பயன்படும் ஒரு Device ஆகும். மொடம் ஆனது தொலைபேசியிலிருந்து வரும் அனலொக் சிக்னலை டிஜிடல் சிக்னலாகவும் கணினியில் இருந்து வரும் டிஜிடல் சிக்னலை அனலொக் சிக்னலாகவும் மாற்ற உதவுகிறது.


பொதுவாக மொடம் இரண்டு வகைப்படும் அவை:
Internal Modem
External Modem

Internal Modem ஆனது கணினியின் உள்ளே பொருத்தப்படுவது ஆகும். இது Mother Board இல் உள்ள PCI Slot இல் பொருத்தப்படும். இந்த வகை இன்டேர்னல் மொடம் கணினியின் உள்ளே பயன் படுத்துவதால் இடம் மிச்சப்படுகிறது. மொடத்திற்கு தனியாக மின்சாரமே செலுத்த வேண்டியதேவையும் இல்லை. பயன்படுத்தவும் இலகுவானது. ஆனால் இன்டேர்னல் மொடம் பயன் படுத்துவதால் சில தீமைகளும் உள்ளன. இவை பழுதடைந்து விட்டால் திருத்துவதற்கு கணினியையே கழற்ற வேண்டும். எமது தேவைக்கேற்ப மொடத்தினை வேறு கணினிக்கு இடம் மாற்றுவது கடினம்.
External Modem ஆனது கணினிக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும். இது விலை சற்று அதிகமாகும். இதனை இலகுவாக வேறு கணினிகளுக்கு இடம் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு தனியாக மின்சாரம் கொடுக்க வேண்டும்.





Wednesday, May 5, 2010

PCI

PCI Slot ஆனது Mother Board இல் பெரும்பாலும் நான்கு அளவுகளில் காணப்படுகிறது.

அவை:
  • PCI-X
  • PCI-Express 16X
  • PCI
  • AGP
  • PCI-Express


PCI Slot கூடுதலான ஆட் ஆன் கார்டுகளை பயன் படுத்துவதற்கு பயன்படும். கிராபிக்ஸ் கார்ட் Mother Board உடன் ஒருங்கிணைந்து கிடைக்கவில்லை எனில் PCயின் பயனை அதிகரித்து மெருகூட்டுவதற்காக கிராபிக்ஸ் கார்டுகள் மற்றும் மேலும் தேவை எனில் LAN Card, Wifi Card, TV Card, Sound Card போன்ற Card களை நம்முடைய தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.

Saturday, May 1, 2010

Hard Disk

Hard Disk என்பது கணினிகளில் உள்ள நிலையான நினைவகம். குறிப்பாக மேசைக்கணி, மடிக்கணி, குறுமடிக்கணி  (net top), போன்ற கணினிகளில் கணினியைப் பயன்படுத்தத் தேவையான இயக்குதள மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும் நினைவகம். கணினியை இயக்கும் மின்னாற்றலை நீக்கினாலும், அழிந்து போகாமல் நினைவில் வைத்திருப்பதால் இதனை அழியா நினைவகம் (non-volatile memory) வகை என்றும், நிலை நினைவகம் என்றும் கூறுவர். இந்த வன்தட்டு நிலை நினைவகத்தில் (HDD) காந்தப் பூச்சுடைய வட்டமான தட்டுகளில் (Disk), 0,1 என்னும் Binary முறையில் தரவுகள் குறியேற்றப்பட்டு பதிவு (encode)
செய்யப்பட்டிருக்கும். இத் தட்டுகள் நிமிடத்திற்கு பல்லாயிரக்கணக்கான முறை சுழலவல்லது, எனவே எண்ணிமத் தரவுகளை இந்த காந்தப்பூச்சுள்ள வட்டைகளில் முறைப்படி விரைவாகப் பதிய வைக்கவும் (இதற்கு Write என்று பெயர்), ஏற்கனவே பதிந்துள்ளதை (எழுதியதை)ப் படிக்கவும் (Read) முடியும்.


வன்தட்டு நிலை நினைவகமத்தை (HDD) முதன்முதலாக, தனிமனிதப் பயன்பாட்டுக்கான மேசைக்கணினிகள் தோன்றும் முன்னரே 1956 இல் ஐபிஎம் (IBM) நிறுவனம் உருவாக்கிப் பயன்படுத்தியது [1]). ஆனால் இன்று இத்தகைய வநிநிகள் கணினிகள் மட்டுமன்றி, எண்ணிம நிகழ்பட ஒளிப்படக் கருவி (digital video recorder) முதல் செல்பேசிகள் (அலைபேசி) வரை பல எண்ணிமக் கருவிகளும், அறிவியல் கருவிகளிலும் பயன்படுகின்றது.
இந்த Hard Disk  40 Pin  கொண்ட IDE Cable  மூலம் Mother Board  இல் உள்ள IDE Solt இல் இணைக்கப்படும்.
Related Posts with Thumbnails