Wednesday, May 25, 2011

Morse Code என்றால் என்ன?


Morse Code எனப்படுவது எழுத்து வடிவங்களை சங்கேத முறையில் (இரகசியமாக) பரிமாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகும். இது இரண்டு முறைகளில் பரிமாற்றம் நடைபெறுகிறது. ஒன்று சங்கேத குறியீட்டு வடிவம், இரண்டு ஒலி வடிவம் என்பன ஆகும். Morse Code முறையானது Samuel F. B. Morse என்பவராலும் இலத்திரனியல் முறையில் Alfred Vail என்பவராலும் 1840 களில் அறிமுகம் செய்யப்பட்டது எனினும் 1890 இலேயே இது வானொலி அலைகளாக மாற்றப்பட்டு தகவல் பரிமாற்றம் செய்யப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

சங்கேத குறியீட்டு வடிவடிவத்தினை அடிப்படையாகக் கொண்டே தகவல் பரிமாற்றம் இங்கு நடைபெறுகின்றது. ஆங்கிலத்திலுள்ள A-Z எழுத்துக்களும் 0-9 வரையான இலக்கங்களும் முறையே "Dots" மற்றும் "Dashes" (புள்ளி மற்றும் கோடு) ஆகிய குறியீடுகளே பயன்படுகின்றது. உதாரணமாக ஆங்ககில எழுத்து "i" இல் உள்ள மேலே உள்ள புள்ளியும் கீழே காணப்படும் பகுதி கோடு எனவும் கொள்ளப்படுகிறது. இந்த இரு குறீயீடுகளையும் வைத்து அனைத்து எழுத்துக்களும் வித்தியாசமான வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப் படுகின்றது. இனி இந்த Morse Code இனை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போமானால்


A எனும் ஆங்கில எழுத்தினை Morse Code இல்
என்றவாறு குறிப்பிடலாம்.  அடுத்து உள்ள படத்தில் "A" இனது வடிவம்

 எல்லா எழுத்துக்களுக்குமான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 



 இது எவ்வாறு ஒலி வடிவமாக அனுப்பப்படுகிறது என பார்ப்போமானால்  புள்ளிகள் வரும் இடங்களில் குறில் ஒலியாகவும் கோடு வரும் இடங்களில் நெடில் ஒலியாகவும் மற்றப்படுகிறது. இதற்கு  ஒரு வகையான Translator  கருவி பயன் படுத்தப்படுகிறது.  ஒலிவடிவத்திலுள்ள சமிஞ்சைகள் மிங்காந்த அலைகளாக மாற்றம் செய்யப்பட்டு ஒலிபரப்பு செய்யப்படுகிறது அதாவது இது ஒரு வானொலி பிரிவர்த்தனை நிலையம் போல செயற்படுகிறது (Sending).    

இனி தகவலை பெற்றுக்கொள்ளும் இடத்தில் ( தகவல் பெற்றுக்கொள்ளும் இடம் பல கிலோ மீற்றர் தூரமாகவும் இருக்கலாம்.) Reviver மூலமாக பெறப்பட்ட சமிஞ்சைகளான குறில் ஒலிகளும், நெடில்களும்    மீண்டும் புள்ளிகளாகவும் கோடுகளாகவும் மாற்றப்பட்டு Print செய்யப்படுகிறது. 

உதாரணத்திற்கு கீழே இரு ஒலி வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன டவுன்லோட் செய்து பார்க்கவும்.

ஆங்கில எழுத்துக்களை Morse Code இற்கு மாற்றுவதெற்கென ஒரு இணையத்தளம் உள்ளது கிளிக் செய்யவும்





No comments:

Post a Comment

Thank You!
Please Follow Me.
Mobile 0750383595

Related Posts with Thumbnails