Friday, June 11, 2010

தொடர்பாடல் வகைகள்

தொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம்.
Simplex - ஒரு வழி தொடர்பாடல்
Duplex - இரு வழி தொடர்பாடல்

Simplex
பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு வழி தொடர்பாடல் எனப்படும். இங்கு செய்தியை பெறுபவர் செய்தியை அனுப்புபவருக்கு தகவல் தெரிவிக்க முடியாது.
   
உதாரணம்: Radio, TV

Duplex

பின்னூட்டல் உள்ள தொடர்பாடல். இது இரு வழி தொடர்பாடல் எனப்படும். இங்கு செய்தியை பெறுபவர் செய்தியை அனுப்புபவருக்கு தனது கருத்துக்களை தெரிவிக்க முடியும். இவ் இரு வழி தொடர்பாடல் ஆனது இருவகைப்படும்.
அவை:-
        Half Duplex - மட்டுப்படுத்தப்பட்ட இரு வழி தொடர்பாடல்
        Full Duplex - முழுமையான இரு வழி தொடர்பாடல்.

Half Duplex
இங்கு செய்தியை பெறுபவர் செய்தியை அனுப்புபவருக்கு தனது கருத்துக்களை தெரிவிக்க முடியும். ஆனால், இது மட்டுப்படுத்தப்பட்ட இரு வழித்தொடர்பாடலாகவே இருப்பதனால் தனது கருத்துக்களை உடனடியாக தெரிவிக்க முடியாது. குறித்த விதிமுறைகளின் படியே தனது கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

உதாரணம்: Walk talky, Wireless, E-Mail.

Full Duplex

இங்கு செய்தியை அனுப்புபவரும் பெறுபவரும் எவ்வித தடங்கலும் இன்றி தகவல் or கருத்தை உடனடியாக தெரிவிக்க முடியும்.

உதாரணம்: Telephone, Chatting.

1 comment:

Thank You!
Please Follow Me.
Mobile 0750383595

Related Posts with Thumbnails