Saturday, June 30, 2012

ரெஸிஸ்டர்கள்

ஒரு கண்டக்டர் மின்னோட்டத்தைச் சிறந்த முறையில்ச் செலுத்தும். ஒரு இன்சுலேட்டர் மின்னோட்டத்தை அறவே செலுத்தாது தடுத்து நிறுத்திவிடும்.

சில சமயம் ஒரு கம்பயின் வழியாக வரும் மின்னோட்டத்தைக் குறைக்க வேண்டி வரும். இப்படிப்பட்ட இடங்களில் ரெஸிஸ்ரர்கள் என்ற பொருட்களை இணைத்துவிட்டால் அவற்றின் மதிப்பிற்கு ஏற்ப (ஓம்ஸ்  அளவிற்கு ஏற்ப) கரண்ட் அளவைக் குறைத்து மீதிக் கரண்டை செலுத்துகின்றன. இவற்றில் பல வகைகள் இருக்கின்றன.

Wire Wound
வயர் என்றல் கம்பி எனவும் வவ்ண்ட் என்றால் சுற்றப்பட்டது எனவும் பொருள்படும். இவை கம்பியாலே அமையப்பட்ட ரெஸிஸ்ரராகும். 30கேஜ் பருமனுள்ள 100அடி நீளமுள்ள கம்பியின் தடைத் தன்மை 50ஓம்ஸ் ஆகும். இதே 30கேஜ் பருமனில் 100அடி நீளத்தில் நைக்ரோம் கம்பியின் தடைத்தன்மை 500ஓம்ஸ் அளவாகக் கூடியிருப்பதைக் கவனிக்கலாம். அதாவது பொருளைபபொறுத்து அதன் தடைத் தன்மை கூடிவிட்டது, இன்னும் 1000ஓம்ஸ் 2000ஓம்ஸ் ரெஸிஸ்ரன்ஸ் வேண்டுமானால் அதே நைக்ரோம் கம்பியின் 200அடி 300அடி என எடுத்துக்கொண்டு ஒரு பீங்கான் குழாய் மேல் சுற்றிக் கொண்டால் 1000, 2000  ஓம்ஸ் கிடைக்கும்.


Wire Wound ரெஸிஸ்ரர்கள் பொதுவாக அதிகளவு மின்சக்தி விரயமாகும் இடங்களில் பயன்படுத்தபபடுகிறது.  அதாவது 5வாட் 10வாட் 100வாட் மின்சக்தி தாங்க வேண்டிய இடங்களில் உபயோகப் படுத்தப்படுகின்றன. ஆனால் அதன் ஓம்ஸ் அளவு 10,000ஓம்ஸ் அளவிற்கு மேலாகக் கிடைக்காது. மெயின் கரண்டில் வேலை செய்யும் ஏஸி-டிஸி ரேடியோ களில் மின்னழுத்தம் (ஓல்ட்) பெருமளவில் குறைக்கப்பட வேண்டியுள்ளது. அந்த மாதிரியான இடங்களில் மின்சக்தியும் அதிக அளவில் செலவாகுமாதலால் இந்த ரெஸிஸ்ரர்கள் தான் பயன் படுத்தப்படுகின்றன.

அடுத்த பதிவில் கார்பன் ரெஸிஸ்ரர்கள் பற்றி பார்க்கலாம்.

2 comments:

Thank You!
Please Follow Me.
Mobile 0750383595

Related Posts with Thumbnails