பெரும்பாலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் Inbox இலே காணபடும். Facebook, Feed Burner மூலம் பெறப்படும் மின்னஞ்சல்கள், நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் என எல்லாமே ஒன்றாக காணப்படும் இது நாம் மின்னஞ்சல்களை இலகுவாக ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு சிரமமிலாமல் குறித்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் மின்னஞ்சல்களை வேறு வேறாக குறித்த Folder இனுள் விழச்செய்யும் வசதி Yahoo, Gmail போன்றவற்றில் உள்ளது.
Yahoo வில் Folder அமைப்பதற்கு முதலில் Folders என்னும் பகுதியில் உள்ள Add என்பதை அழுத்தவும் தோன்றும் Folder இற்கு விரும்பிய பெயரைக்கொடுக்கவும். இப்பொழுது Inbox இல் உள்ள குறித்த மின்னஞ்சலை Open செய்யவும் Action என்பதை Click செய்யவும் தோன்றும் Menu வில் Filter Emails Like This... என்பதை Click செய்யவும் Add Filter என்னும் Menu வில் உள்ள Then Move the message to: என்பதன் கீழ் உள்ள -Choose Folder- என்பதில் நீங்கள் Add செய்த Folder இனை Select செய்து Save என்பதை Click செய்ததும் தோன்றும் Menu விற்கு OK என்பதை Click செய்யவும்.
Gmail இல் இதனை செய்வதற்கு மின்னஞ்சலை Select செய்து More actions என்பதை Click செய்யவும் அதில் உள்ள Filter messages like these என்பதை Click செய்ததும் Next step என்பதை Click செய்யவும் Skip in inbox என்பதையும் Apply the label என்பதையும் select செய்து Choose Label என்பதில் new label என்பதை கொடுத்து label இற்கான பெயரையும் கொடுத்து ஒகே இனை கொடுத்து Create Filter என்பதை அழுத்தவும்.
இனி நீங்கள் தெரிவுசெய்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் அனைத்து மின்னஞ்சல்களும் நேரடியாக நீங்கள் Add செய்த Folder இனுள்ளேவரும்.இனி உங்கள் Inbox தெளிவாகவும் மின்னஞ்சல்களை இலகுவாகப் படிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment
Thank You!
Please Follow Me.
Mobile 0750383595