எல்லோருக்கும் தாமும் ஒரு வலைத்தளம் வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அந்த வலைத்தளத்தினை பார்க்கும் எல்லோரும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே தகவல்களை இடுவர். அந்த வகையில் நாம் இடுகின்ற தகவல்களானது பார்ப்பவர்களுக்கு உதவுகின்ற வகையில் அமைந்திருக்க வேண்டும். அதற்கு நம் வலைத்தளம் எந்த துறை சார்ந்த தகவல்களை அடக்கியது என்பதுவே முக்கியமாக அமைகிறது.
எந்த துறையை தேர்வுசெய்வது?
பெரும்பாலானவர்கள் எந்த துறைசார்பாக அதிகளவு வலைத்தளங்கள் காணப்படிகின்றதோ அதுபோலவே தாமும் அமைத்துவிடுகின்றனர். இவ்வாறு அமைத்துவிட்டு சிறிதுகாலம் சென்றதும் புதிதாக என்ன தகவலை இடுவது என்று தெரியாமல் மற்றவர்களை காப்பி அடிக்கும் நிலமை வராமல் இருக்கவே நான் ஒரு ஐடியா வைத்திருக்கிறேன். அதாவது நீங்கள் ஒவ்வொருவரும் என்ன தொழில் செய்கிறீர்களோ அது சார்பாகவே உங்கள் வலைத்தளத்தயும் அமைத்திடுங்கள்! உதாரணமாக நீங்கள் ஒரு விஞ்ஞான பாட ஆசிரியராக இருந்தால் விஞ்ஞானம் சார்பான உயிரியல், பௌதீகவியல், இரசாயனவியல் சார்பான தகவல்களை தினமும் இடலாம். இது உலகிலுள்ள மாணவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயன்படக்கூடியதாக இருக்கும்.(இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் என்ன வேலை செய்பவர்?) நீங்கள் கணினி சார்ந்த தொழில் செய்பவராக இருந்தால் அதுசார்பான வலைத்தளத்தை ஆரம்பிக்கலாம்.
இந்த வழிமுறை மூலம் தம்மிடம் உள்ள புதிய விடையங்களை எல்லோர்க்கும் பயன்படுமாறு பகிர்ந்திடலாம். இங்கு தெரிந்தவற்றை மட்டும் சுயமாக இடுவதால் மற்றவர்களை காப்பி அடிக்கவேண்டிய தேவை ஏற்படாது.
Good Post, u r welcome to jeiguna
ReplyDelete