Sunday, February 6, 2011

விரும்பிய எல்லா புரோக்கிராம்களையும் மிக வேகமாக திறக்கலாம்

நாம் கணினியில் வேலை செய்துகொண்டிருக்கையில் வேறு தேவைகளுக்காக பல புரோக்கிராம்களை திறக்க நேரிடும் அவ்வாறான வேளையில் My computer மூலமாக அல்லது Start Menu இனூடாக புரோக்கிராம்களை Open செய்துகொள்வோம் இதன் போது நேரமும் வீண் விரயமாகின்றது அதை Open செய்வதே ஒரு வேலையாகவும் அமைகின்றது. இந்த வேலையை இலகுவாகாச் செய்வதற்கே ஒரு செய்வதற்காகவே இருக்கிறது ஒரு சூப்பர் மென்பொருள் இருக்கிறது அதுதான் Launchy  இது பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவானது. Install செய்ததும் System Ray இனுள் வந்து அமர்ந்து கொள்ளும், நீங்கள் Alt+Space இனை அழுத்தியதும் Window ஒன்று தோன்றும் (கீழே படத்தில் உள்ளவாறு.)
 அதில் நீங்கள் திறக்க விரும்பும் புரோக்கிராமின் முதல் எழுத்துக்களை Type செய்ததும் அவ்வெழுத்திலுள்ள புரோக்கிராம்கள் Search செய்யப்பட்டு வரிசைப்படுத்தப்படும் இலகுவாக Select செய்ததும் Enter Key இனை அழுத்தவும்! நொடிப்பொழுதில் Open செய்துவிடலாம். இதனை Download செய்வதற்கு Click Here

Sunday, January 16, 2011

Windows இல் Task Manager இயங்காதபோது கைகொடுக்கும் Process Explorer

சிலவகை வைரஸ்களால் Windows இல் உள்ள Task Manager இயங்காமல் போகிறது அவ்வாறான வேளைகளில் Task Manager இற்குப் பதிலாக கிடைக்கின்ற மென்பொருள்தான் இந்த Process Explorer.

Task Manager ஆனது நமது கணினியில் தற்போது நடந்துகொண்டிருக்கும் Process களையும், கணினியின் CPU செயல்பாடுகளையும், Page File Usage இனையும் அறிய உதவுகிறது. அதில் நாம் அதிகம் பயன்படுத்துவது Processes என்ற பகுதியே ஆகும்.  இதில் கணினியின் உள்ளே மறைமுகமாக நடந்துகொண்டிருக்கும் தேவையில்லாத Process களை நிறுத்தலாம். ஆனால் சிலவகையான Root-kit Virus களின் தாக்குதல்களினால்  இந்த Task Manager ம், Registry ம் செயல் இழக்கப்படுகின்றது. அவாறான நேரங்களில் Task Manager இனை மீட்டெடுப்பதற்கும், வைரஸ் களை அகற்றுவதற்கும் Process Explorer பயன் படுகின்றது.

Task Manager இனை விட இதில் அதிக வசதிகள் காணப்படுகிறது.
1) Process களை தனிதனி பிரிவுகளாக அறியலாம்.
2) ஒவ்வொரு Process களுக்கும் Description கொடுக்கப்பட்டுள்ளது.
3) Process எங்கிருந்து நடைபெறுகிறது என்பதை இலகுவாக அறியலாம், உதாரணம்- "C:\WINDOWS\Explorer.EXE"

Download செய்வதற்கு இங்கு Click செய்யவும்.

Friday, January 14, 2011

முற்றிலும் இலவசமாக Internet Download Manager

இணையத்தில் அதிவேகமாக வீடியோகளையும், மென்பொருட்களையும், MP3 களையும் Download செய்யக்கூடிய மென்பொருள் Internet Download Manager என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இது இணையத்தில் 30 நாள் Trial Version ஆகவே கிடைக்கிறது தேவையானால் $29.95 செலவு செய்து வாங்க வேண்டும். பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு தடவையும் 30 நாள் Trial Version முடிந்ததும் மீண்டும் Download செய்து பயன்படுத்துகின்றனர். அவர்களுக்காவே இங்கு கிடைக்கிறது Internet Download Manager மென்பொருள் முற்றிலும் இலவசமாக!

இதனை Download செய்ததும் ஒருதடவை Setup.exe என்ற கோப்பை ஒருதடவை இயக்கினால் போதும்  தன்னியக்கமாகவே மென்பொருள் கணினியில் நிறுவப்பட்டுவிடும். மென்பொருளை Download செய்வதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

Monday, August 30, 2010

Fileகள், Folderகள், Drive களுக்கான Icon களை விருப்பம்போல மாற்றலாம்

நீங்கள் அன்றாடம் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கையில் ஒரே மாதிரியான Fileகளையும், Folderகளையும், Driveகளையும் பார்த்து சலித்திருக்கலாம். இவற்றை எமது விருப்பம் போல வித்தியாசமான Icon களையோ அல்லது நீங்களே உருவாக்கிய உங்கள் படங்களையும் Icon களாக அமைத்திடலாம். இந்த மென்பொருள்மூலம் [IconTweaker] இலகுவான முறையில் Icon களை மாற்றும்விதமாக Themes என்ற பகுதியில் பல விதமான Icon கள் அமைக்கப்பட்டுள்ளது. இதைவிட Icons என்ற பகுதியில் எமது  விருப்பத்திற்கேற்ப வேறு Icon களையோ அல்லது நாமே உருவாக்கிய Icon களையோ அமைத்திடலாம்.


இலகுவாக Icon களை மாற்றுவதற்கமைய Network Icon கள், கர்சர்கள், ஃபோல்டர்கள், டிரைவ்கள், ஃபைல்கள், டெஸ்டொப் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மென்பொருள் மூலம் தற்போதுள்ள Iconகளுக்கான மாற்றங்களை சேவ்செய்து பாதுகாக்கும் வசதியும் உள்ளமை சிறப்பு ஆகும்.


மென்பொருளை டவுண்லோட் செய்திட  இங்கு கிளிக் செய்யவும்.
தயவுசெய்து உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் தெரிவிக்கவும்.

Monday, August 16, 2010

கூகிளில் Image களை நேரடியாக தேடுவதற்கான Fire Fox Add-ons

நமக்கு தேவையான தகவல்களைப்பெறுவதற்காக கூகிள் போன்ற தேடுஇயந்திரங்களில் தேடுகின்றோம். கூகிள் Home Page இற்குச் சென்று அங்கு சொற்களை கொடுத்து தேடுவதைவிட Firefox இன் Address Bar இன் அருகில் உள்ள Search Box இன் மூலம் தேடுவது இலகுவானதாகும். இதில் தேடும் தகவல்கள் Google Web இலேயே தேடப்படுகிறது, நமக்கு படங்களாகவே தேடும் தகவல் தேவை எனில் Images என்பதை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு நேரத்தை வீணடிக்காமல் Search Box இலேயே படங்களை தேடுவதற்குத்தான் இந்த Add-ons.



Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

Tuesday, August 10, 2010

கணினியில் வேகமாக New Folder உருவாக்குவது எப்படி?

கணினியை பயன்படுத்துகையில் Folder களின் பயன்பாடானது மிகவும் இன்றியமையாததுவாகும். நாம் தினமும் நமது தேவைக்கேற்ப பல புதிய Folder களை உருவாக்கின்றோம். ஒவ்வொரு தடவையும் New Folder உருவாக்கும் போது Mouse மூலம் கிளிக் செய்தே உருவாக்கின்றோம் இதனை விட வேகமாக Keyboard (Shortcut) வழியாக உருவாக்கிடலாம். இதற்கு எந்த ஒரு மென்பொருளோ, மாற்றங்களோ செய்திட தேவையில்லை.

  • நீங்கள் New Folder உருவாக்கவேண்டிய இடத்தில் Right Click செய்து Keyboard இல் WF இனையும் அழுத்திடுங்கள் (ஒன்றாக அல்ல வரிசையாக அழுத்தவும்)


    • அல்லது  New Folder உருவாக்கவேண்டிய இடத்தில் பின்வரும் Key களை வரிசையாக அழுத்தவும் Alt, F, W, F இப்பொழுது திரையில் New Folder  உருவாகியிருப்பதை பாருங்கள்.

    Sunday, August 1, 2010

    ஒரு Website இல் உள்ள அனைத்து தகவல்களையும் Download செய்தல் [கேள்வி - பதில்]

    ஒரு Website இல் உள்ள அனைத்து தகவல்களையும் (Links) ஒரே தடவையில் Download செய்ய முடியுமா? இதற்கு ஏதேனும் மென்பொருட்கள் இருக்கின்றனவா?
    -லதீப்-

    லதீப் அவர்களே, நிச்சயமாக ஒரு Website இல் உள்ள அனைத்து தகவல்களையும் Download செய்து கொள்ளலாம். முதலில் நீங்கள் கேட்ட கேள்வியை விரிவாகப்பார்ப்போம்.
    பொதுவாக நாம் ஒரு Web Page இனை பார்த்துக்கொண்டிருக்கையில் அது நமக்கு தேவையாக இருந்தால் File > Save Page As.. என்பதனூடாக Save அந்த பக்கத்தை சேமித்துக்கொள்வோம். இதன் மூலம நாம் Open செய்துள்ள பக்கம் மட்டுமே பதிவாகிறது. ஆனால் நாம் பார்க்கும் Website இல் உள்ள அனைத்து தகவல்களும் நமக்கு தேவையாக இருக்குமானால் ஒவ்வொரு பக்கத்தையும் Open செய்து Save செய்யவேண்டியிருக்கும். அவ்வாறில்லாமல் அந்த Website இன் ஒவ்வொரு Link இலும் உள்ள தகவல் அனைத்தையும் ஒரே தடவையில் Save செய்திடவே Fire Fox இல் Down Them All என்ற Add-ons உதவுகிறது.

    இந்த Add-ons இனை நிறுவியதும் நாம் பார்க்கின்ற Page இல் Right Click செய்து DownThemAll!.. என்பதை Click செய்தது தோன்றும் Window இல் Filters என்பதை Click செய்து அதில் All Files அல்லது உங்கள் விருப்பம் போல் எதையாவது தெரிவுசெய்து Start என்பதனை அழுத்தவும். (Save Files in என்ற இடத்தில் Download செய்யவேண்டிய இடத்தினை தெரிவுசெய்திடலாம்). மேலும் ஏதேனும் ஒரு Link இன் மீது வைத்து Right Click செய்து dTa OneClick!.. என்பதை Click செய்வதன் மூலம் அந்த Link இனை திறக்காமலே Save செய்திடலாம்.

    [இதன் மூலம் உங்கள் Website இனை Backup எடுக்கவும் முடிகிறது. மேலும் Net cafe இற்கு சென்று தேவையான தளங்களை Download செய்துவந்து வீட்டில் ஆறுதலாக வாசிக்கலாம்.]

    இந்த Add-ons இனை Download செய்திட இங்கு Click செய்யவும்.
    Related Posts with Thumbnails