Showing posts with label android. Show all posts
Showing posts with label android. Show all posts

Wednesday, April 3, 2013

Android apk Backup

Android தொலைபேசியில் install செய்துள்ள மென்பொருட்களை எப்படி Backup செய்யலாம் என இப்பதிவில் பார்க்கலாம்.

பெரும்பாலானவர்கள்  google play மூலமே மென்பொருட்களை install செய்கின்றனர். இவ்வாறு  செய்துள்ளவற்றை சில சந்தர்ப்பஙளில் அழிக்கப்பட்டால் மீண்டும் அவற்றை  google play இருந்தே  வேண்டும். இதனை தவிர்க்கவே Ultimate Backup என்ற மென்பொருள் உதவுகிறது.
இதன் மூலம்  உள்ள மென்பொருற்களை apk fileகளாக உங்கள் memory cardஇல் சேமித்துக்கொள்ளலாம். தேவைப்படும் போதும் install செய்யலாம், வேறு தொலைபேசியிலும் install செய்யலாம்.






Friday, March 15, 2013

Android - Phone Book இணை Cloud இல் இணைத்தல்

நாம் பொதுவாக நமக்கு வேண்டியவர்களின் தொலைபேசி இலக்கங்களை தொலைபேசியிலோ அல்லது சிம் அட்டையிலோ தான் சேமிப்போம். இதன் போது அந்த சிம் அட்டையை பயன்படுத்த முடியாமல் போனாலோ அல்லது தொலைபேசியோ தொலைந்துபோனால் உங்கள்முக்கியமானவரளின் தொடர்பு இலக்கங்களை இழக்க நேரிடும்.

இதற்காகவே Android தொலைபேசிகளில் இலகுவான வழி உள்ளது,  அதுதான் தகவல்களை இணையத்தில் இணைத்து விடுவது! இதற்கு முதலில் உங்கள் தொலைபேசியில் Settings > Account and Syc சென்று Sync Contacts என்பதை Trick  செய்துவிடவும்.



அடுத்து Contact > Settings > Save New Contacts To  என்பதில் Google என்பதை கொடுக்கவும்.



இனி நீங்கள் புதிதாக சேமிக்கும் இலக்கங்கள் Google இல் சேமிக்கப்படும்,
நீங்கள் எந்த கணினியிலும் உங்கள் Gmail ID மூலம் Contact இல் உங்கள் கணக்கை பார்வையிடலாம், மாற்றங்கள் செயலாம், வகைப்படுத்தலாம்.
 



Related Posts with Thumbnails