Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

Wednesday, July 3, 2013

நிற அடர்த்தி என்றால் என்ன?

ஒரு வர்ணப்புகைப்படத்தில் உள்ள வர்ணங்களில் உள்ள அளவு எவ்வாறு அமைகிறது? அதன் அளவீடுகள் யாது?....என்பது பற்றியே இக் கட்டுரையை எழுதிகிறேன்.

நிற அடர்த்தி (Color Depth) எனப்படுவது, ஒரு படத்திலுள்ள பிக்ஸ்சல்கள் எத்தனை வர்ணம் களைப் பயன்படுத்தி படத்தை உருவக்கின்றன என்பதையே குறிப்பிடுகிறது. வர்ணங்களது அடர்த்தியானது இலக்கங்களில் கணிக்கப்படுகிறது. இவ் வர்ண வேறுபாடு காட்சிப்படுத்தப்படும் திரையின் வன்பொருள் அல்லது மென்பொருள் ஆல் கட்டுப்படுத்தலாம். 1 bit என குறிப்பிட்டால் அது இரண்டு வர்ணங்களை மாத்திரம் பயன்படுத்தி அமைக்கப்பட்ட படம்.

2 பிட் எனில் 22 = 4 வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்ட படம் என அறியலாம்.
  • 1-பிட் = இரண்டு வர்ணங்கள்
  • 2-பிட் = நான்கு வர்ணங்கள்
  • 4-பிட் = பதினாறு வர்ணங்கள்
  • 8-பிட் = 256 வர்ணங்கள்
  • 24-பிட் = 16 மில்லியன் வர்ணங்கள், 24-பிட் வர்ணப்பானையே இன்று அதிக அளவில் உள்ளது. 8-பிட் பழைய செல்போன் களில் பயன்படுத்தப்பட்டது எனினும் இன்றய செல்போன்களின் திரை 24-பிட் ஆகவே உள்ளது.
2 bit (4 வர்ணங்கள்)
பிட் களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதிகளவிலான வர்ணங்ககைப் பயன்படுத்த முடிகிறது ஆகையால் தெளிவான காட்சியை பெறலாம் (இங்கு தெளிவான காட்சி என குறிப்பிடுவது படத்தின் தரம் அல்ல படத்திலுள்ள வர்ணத்தின் தரத்தினை மாத்திரமே).

8-பிட் வர்ணம்

8-பிட் வர்ணம் எனில் இலத்திரனியல் திரையில் பயன்படுத்தப்படும் RGB (சிகப்பு-பச்சை-நீலம்) ஆகிய வர்ணங்களை பயன்படுத்தி வர்ணத்தை ஏற்படுத்துவதற்காக முறையே (8x8x4 = 256) என பிரிக்கப்படுகிறது. (மனித கண்ணால் சிகப்பு பச்சை வர்ணங்களிலும் பார்க்க நீல வர்ணத்தை குறைவாகவே அடையாளம் காண முடியும்.)

நிஜ வர்ணம் 24-பிட்

மிகவும் தரமான வர்ணத்தை கொடுக்ககூடியதால் நிஜ வர்ணம் எனப்படுகிறது. இதில் மிகவும் அதிக அளவிலான வர்ணங்களைப் பயன்படுத்த முடிகிறது (16 மில்லியன்). 10 மில்லியனுக்கும் அதிகமான வர்ணங்களை மனித கண்களால் இலகுவாக அடையாளம் காணமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


அதி உயர் அடர்த்தி மிக்க வர்ணங்களாக (30/36/48-பிட்) ஆகியவை உள்ளன. இவற்றிற்கும் 24-பிட் இற்கும் இடையிலான வேறுபாட்டினை சாதாரண திரைகளில் இனங்காண முடியாது மிகப் பெரிய திரைகளிலே அரிதாகவே இனங்காண முடியும்.





Monday, July 1, 2013

Print செய்யும் பேப்பர்களின் அளவுகள்


போட்டோஷோப் போன்ற மென்பொருட்களில் வேலை செய்யும் போது  print செய்ய வேண்டிய பேப்பரின் அளவினை சரியாக தெரிவு செய்யாவிட்டால் விளைவு மிகவும் மோசமாகிவிடும்! உதாரணமாக: A3 இல் print வேண்டுமெனில் A4 இனை தறவறுதலாக தெரிவு செய்துவிட்டால் படம் மங்கலாக வந்துவிடும்.

பொதுவாக "inch" or "mm" களை பயன்படுத்துவர். pix (ex:1366x768) களில் வேலை செய்யும் போது DPI இனையும் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும் (Dot Per Inch).
சாதாரண புகைப்படங்கள், விளம்பர அட்டைகள் எனில் 120dpi ம் பெரிய அளவிலாயின் 96dpi ம் மிகப்பெரிய அளவாயின் 76dpi ம் பயன்படுத்தலாம்.

DPI அதிகரித்தால் படத்தில் தெளிவு அதிகமாகும் குறைவடைந்தால் தெளிவும் குறைவடையும். (படத்தினை சூம் செய்து பார்க்கும் போது வித்தியாசத்தினை காணலாம்)
பெரிய படமாயின் 76dpi போதும் என குறிப்பிட்டுள்ளேன். காரணம் உதாரணமாக ஒரு சுவர் அளவுள்ள பிரம்மாண்டமான படத்தை யாரும் அருகே வந்து பார்க்கப்போவத்தில்லை! அத்துடன் பெரிய படங்களை 120dpi இல் செய்ய 2gb ram போதாது கணிணி load ஆகிவிடும்.

                            SizeHeight x Width (mm)Height x Width (in)
                          4A02378 x 1682 mm93.6 x 66.2 in
                          2A01682 x 1189 mm66.2 x 46.8 in
                       A01189 x 841 mm46.8 x 33.1 in
                       A1841 x 594 mm33.1 x 23.4 in
                      A2594 x 420 mm23.4 x 16.5 in
                      A3420 x 297 mm16.5 x 11.7 in
                      A4297 x 210 mm11.7 x 8.3 in
                      A5210 x 148 mm8.3 x 5.8 in
                      A6148 x 105 mm5.8 x 4.1 in
                     A7105 x 74 mm4.1 x. 2.9 in
                     A874 x 52 mm2.9 x 2.0 in
                     A952 x 37 mm2.0 x 1.5 in
                      A1037 x 26 mm1.5 x 1.0 in

Wednesday, April 3, 2013

Android apk Backup

Android தொலைபேசியில் install செய்துள்ள மென்பொருட்களை எப்படி Backup செய்யலாம் என இப்பதிவில் பார்க்கலாம்.

பெரும்பாலானவர்கள்  google play மூலமே மென்பொருட்களை install செய்கின்றனர். இவ்வாறு  செய்துள்ளவற்றை சில சந்தர்ப்பஙளில் அழிக்கப்பட்டால் மீண்டும் அவற்றை  google play இருந்தே  வேண்டும். இதனை தவிர்க்கவே Ultimate Backup என்ற மென்பொருள் உதவுகிறது.
இதன் மூலம்  உள்ள மென்பொருற்களை apk fileகளாக உங்கள் memory cardஇல் சேமித்துக்கொள்ளலாம். தேவைப்படும் போதும் install செய்யலாம், வேறு தொலைபேசியிலும் install செய்யலாம்.






Tuesday, August 16, 2011

கையடக்க தொலைபேசியில் தமிழ் இணையத்தளங்கள்



உங்கள் கையடக்கத் தொலைபேசியில் தமிழ், சிங்கள, ஹிந்தி, மற்றும் ஏணைய மொழிகளில் அமைத்த எந்த இணையத்தளங்களையும் பார்வையிடுவதற்கு.....

முதலில் Opera mini Browser இனை Download செய்து மொபைல் இன்  Install செய்திடவும். இப்போது Opera mini Open செய்து Address bar இல் "about:config" என டைப் செய்து OK இனை அழுத்திடவும்
.
வரும் மெனு வில் "Use bit map fonts for complex scripts" எனும் இடத்தில் No என இருப்பதை Yes என மாற்றி Save செய்திடவும்.

இனி தமிழ் இணையப்பக்கத்தினை Open செய்து பார்க்கவும் தமிழ் பெட்டிபெட்டியாக இல்லாமல் தமிழ் எழுத்துருவில் வாசிக்க கூடிய வகையில் பக்கம் காணப்படுவதை காணலாம்.
Related Posts with Thumbnails