ஒரு வர்ணப்புகைப்படத்தில் உள்ள வர்ணங்களில் உள்ள அளவு எவ்வாறு அமைகிறது? அதன் அளவீடுகள் யாது?....என்பது பற்றியே இக் கட்டுரையை எழுதிகிறேன்.
நிற அடர்த்தி (Color Depth) எனப்படுவது, ஒரு படத்திலுள்ள பிக்ஸ்சல்கள் எத்தனை வர்ணம் களைப் பயன்படுத்தி படத்தை உருவக்கின்றன என்பதையே குறிப்பிடுகிறது. வர்ணங்களது அடர்த்தியானது இலக்கங்களில் கணிக்கப்படுகிறது. இவ் வர்ண வேறுபாடு காட்சிப்படுத்தப்படும் திரையின் வன்பொருள் அல்லது மென்பொருள் ஆல் கட்டுப்படுத்தலாம். 1 bit என குறிப்பிட்டால் அது இரண்டு வர்ணங்களை மாத்திரம் பயன்படுத்தி அமைக்கப்பட்ட படம்.
2 பிட் எனில் 22 = 4 வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்ட படம் என அறியலாம்.
அதி உயர் அடர்த்தி மிக்க வர்ணங்களாக (30/36/48-பிட்) ஆகியவை உள்ளன. இவற்றிற்கும் 24-பிட் இற்கும் இடையிலான வேறுபாட்டினை சாதாரண திரைகளில் இனங்காண முடியாது மிகப் பெரிய திரைகளிலே அரிதாகவே இனங்காண முடியும்.
நிற அடர்த்தி (Color Depth) எனப்படுவது, ஒரு படத்திலுள்ள பிக்ஸ்சல்கள் எத்தனை வர்ணம் களைப் பயன்படுத்தி படத்தை உருவக்கின்றன என்பதையே குறிப்பிடுகிறது. வர்ணங்களது அடர்த்தியானது இலக்கங்களில் கணிக்கப்படுகிறது. இவ் வர்ண வேறுபாடு காட்சிப்படுத்தப்படும் திரையின் வன்பொருள் அல்லது மென்பொருள் ஆல் கட்டுப்படுத்தலாம். 1 bit என குறிப்பிட்டால் அது இரண்டு வர்ணங்களை மாத்திரம் பயன்படுத்தி அமைக்கப்பட்ட படம்.
2 பிட் எனில் 22 = 4 வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்ட படம் என அறியலாம்.
- 1-பிட் = இரண்டு வர்ணங்கள்
- 2-பிட் = நான்கு வர்ணங்கள்
- 4-பிட் = பதினாறு வர்ணங்கள்
- 8-பிட் = 256 வர்ணங்கள்
- 24-பிட் = 16 மில்லியன் வர்ணங்கள், 24-பிட் வர்ணப்பானையே இன்று அதிக அளவில் உள்ளது. 8-பிட் பழைய செல்போன் களில் பயன்படுத்தப்பட்டது எனினும் இன்றய செல்போன்களின் திரை 24-பிட் ஆகவே உள்ளது.
8-பிட் வர்ணம்
8-பிட் வர்ணம் எனில் இலத்திரனியல் திரையில் பயன்படுத்தப்படும் RGB (சிகப்பு-பச்சை-நீலம்) ஆகிய வர்ணங்களை பயன்படுத்தி வர்ணத்தை ஏற்படுத்துவதற்காக முறையே (8x8x4 = 256) என பிரிக்கப்படுகிறது. (மனித கண்ணால் சிகப்பு பச்சை வர்ணங்களிலும் பார்க்க நீல வர்ணத்தை குறைவாகவே அடையாளம் காண முடியும்.)நிஜ வர்ணம் 24-பிட்
மிகவும் தரமான வர்ணத்தை கொடுக்ககூடியதால் நிஜ வர்ணம் எனப்படுகிறது. இதில் மிகவும் அதிக அளவிலான வர்ணங்களைப் பயன்படுத்த முடிகிறது (16 மில்லியன்). 10 மில்லியனுக்கும் அதிகமான வர்ணங்களை மனித கண்களால் இலகுவாக அடையாளம் காணமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.அதி உயர் அடர்த்தி மிக்க வர்ணங்களாக (30/36/48-பிட்) ஆகியவை உள்ளன. இவற்றிற்கும் 24-பிட் இற்கும் இடையிலான வேறுபாட்டினை சாதாரண திரைகளில் இனங்காண முடியாது மிகப் பெரிய திரைகளிலே அரிதாகவே இனங்காண முடியும்.
Super!!
ReplyDelete