Showing posts with label Google. Show all posts
Showing posts with label Google. Show all posts

Friday, March 15, 2013

Android - Phone Book இணை Cloud இல் இணைத்தல்

நாம் பொதுவாக நமக்கு வேண்டியவர்களின் தொலைபேசி இலக்கங்களை தொலைபேசியிலோ அல்லது சிம் அட்டையிலோ தான் சேமிப்போம். இதன் போது அந்த சிம் அட்டையை பயன்படுத்த முடியாமல் போனாலோ அல்லது தொலைபேசியோ தொலைந்துபோனால் உங்கள்முக்கியமானவரளின் தொடர்பு இலக்கங்களை இழக்க நேரிடும்.

இதற்காகவே Android தொலைபேசிகளில் இலகுவான வழி உள்ளது,  அதுதான் தகவல்களை இணையத்தில் இணைத்து விடுவது! இதற்கு முதலில் உங்கள் தொலைபேசியில் Settings > Account and Syc சென்று Sync Contacts என்பதை Trick  செய்துவிடவும்.



அடுத்து Contact > Settings > Save New Contacts To  என்பதில் Google என்பதை கொடுக்கவும்.



இனி நீங்கள் புதிதாக சேமிக்கும் இலக்கங்கள் Google இல் சேமிக்கப்படும்,
நீங்கள் எந்த கணினியிலும் உங்கள் Gmail ID மூலம் Contact இல் உங்கள் கணக்கை பார்வையிடலாம், மாற்றங்கள் செயலாம், வகைப்படுத்தலாம்.
 



Monday, August 16, 2010

கூகிளில் Image களை நேரடியாக தேடுவதற்கான Fire Fox Add-ons

நமக்கு தேவையான தகவல்களைப்பெறுவதற்காக கூகிள் போன்ற தேடுஇயந்திரங்களில் தேடுகின்றோம். கூகிள் Home Page இற்குச் சென்று அங்கு சொற்களை கொடுத்து தேடுவதைவிட Firefox இன் Address Bar இன் அருகில் உள்ள Search Box இன் மூலம் தேடுவது இலகுவானதாகும். இதில் தேடும் தகவல்கள் Google Web இலேயே தேடப்படுகிறது, நமக்கு படங்களாகவே தேடும் தகவல் தேவை எனில் Images என்பதை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு நேரத்தை வீணடிக்காமல் Search Box இலேயே படங்களை தேடுவதற்குத்தான் இந்த Add-ons.



Download செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
Related Posts with Thumbnails