Sunday, July 1, 2012

கார்பன் ரெஸிஸ்ரர்கள்

கார்பன் ரெஸிஸ்ரர்கள் மிகவும் சிறிதாகவே இருக்கும்.  ஆனால் அவற்றின் மதிப்பு 10 கோடி ஓம்ஸ் வரை இருக்கும். இதில் "கார்பன்"(கரி) மிகவும் பிரதானமான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது, 102 மூலப் பொருட்களில் காபன் 6 என்ற அணு எண்ணைக் கொண்ட எலிமென்ட் ஆகும். ஒரு மண்ணெணை விளக்கிலிருந்து வரும் புகையை ஒரு கண்ணாடியில் படும்படி வைத்துக்கொண்டால் அந்தப் புகைப்படலம் ஒரு நல்ல கார்பனாக அமையும். இதோடு சிறிதளவு கண்ணாடி, பேக்லைட் சேர்த்துவிட்டால் அது ஒரு நல்ல கார்பன் ரெஸிஸ்ரராக அமைந்துவிடும். கார்பன் ரெஸிஸ்ரர்கள் 0.25, 0.5, 1, 5 வாட் வரை கிடைக்கின்றன. இவற்றின் மதிப்பு அப்படியே அதன் மேல் 100ஓம், 1000ஓம் என குறிப்பிடப்படுவதில்லை. அதற்கு பதிலாக பல வண்ணங்களில் ஒரு ஓரமாக 3 மோதிரங்கள் போல் கோடிட்டு அதன் மதிப்பை தெரிவிக்கிறார்கள்.

 முதல்  மூன்று வளையங்கள் தான் அதன் மதிப்பைத் தெரிவிக்கும் அதனை அடுத்துள்ளவை தங்கக் கோடு 5%  அல்லது வெள்ளிக்கோடு 10%. இதை "டாலரன்ஸ் கலர்"  என்றும் சொல்வர்.
உதாரணத்துடன் பல ரெஸிஸ்ரர்கள்  மதிப்பை எப்படி கணக்கிடுவது என கவனியுங்கள். முதல் வட்டம் என்ன என கவனியுங்கள். அந்த வண்ணத்திற்குரிய எண்ணை அந்த ரெஸிஸ்ரரின் முதல் அளவாகவும், மூன்றவது வண்ணத்திறகுரிய எண்ணிற்கு ஏற்ப முதல்  இரு எண்களையும் அடுத்து அத்தனை பூஜ்யங்களையும் சேர்த்து மொத்தமாக பார்த்து அறிந்து கொள்ளவேண்டியதுதான்.

முதல் வட்டம் சிகப்பு வண்ணமாக இருந்தால் 2என குறிக்கவும், 2வது வட்டம் பச்சை வண்ணமாக இருந்தால் அதற்குரிய எண் 5யும் சேர்த்துக்கொண்டால் 25 என்று ஆகிவிடும். அதை அடுத்து 3வது வண்ணமாக ஒரேஞ்ச் இருந்தால் அத்ற்கேற்ப மூன்று பூஜ்யங்களை சேர்துதுக்கொண்டால் 25,000ஓம்ஸ் என கிடைத்துவிடும். ஆயிரம் என்ற எண்ணை மெற்றிக் முறையில் கிலோ என சொல்கிறோம். ஆகவே இதன் தடை மதிப்பு 25K ஓம்ஸ் ஆகும்.

எந்த ரெஸிஸ்ரரிலும் முன்னும் பின்னும் கறுப்பு வண்ணம் இருந்தால் அத்ற்கு மதிப்பு எதுவும் கொடுக்காமல் நடுவிலுள்ள வண்ணத்திற்குரிய மதிப்பை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது 11 ஓமிலிருந்து 99ஓம் வரை உள்ள இரு ஸ்தான் மதிப்புள்ள ரெஸீஸ்ரர்களின் கடைசி வண்ணம் கறுப்பாகவும், 1லிருந்து 9 ஓம் வரையுள்ள ஒரு ஸ்தானரெஸிஸ்ரர்களில் மதிப்பு முதல் வண்ணமும் கடைசி வண்ணமும்  கறுப்பாக இருக்கும்.

சில ரெஸீஸ்ரர்களீல் கடைசி வண்ணம் வண்ணமாக இருப்பதற்கு பதிலாக வெள்ளி அல்லது தங்க வளையம் இடப்பட்டிருக்கும். இது வெள்ளியாக இருந்தால் முதல் இரு வளையங்களிக்குரிய மதிப்பை 100 ஆல் வகுத்து கொள்ள  வேண்டும். தங்கமாக இருந்தால் முதல் இரு வளையங்களுக்குரிய மதிப்பை 10ஆல் வகுத்துக் கொள்ளவும்.

தங்ககோடோ வெள்ளி  கோடோ இல்லாமல் காலியாக விடப்பட்டிருந்தால் அதன் மதிப்பு 20% கூடும் அல்லது குறையும் என்று பொருள்.

Saturday, June 30, 2012

ரெஸிஸ்டர்கள்

ஒரு கண்டக்டர் மின்னோட்டத்தைச் சிறந்த முறையில்ச் செலுத்தும். ஒரு இன்சுலேட்டர் மின்னோட்டத்தை அறவே செலுத்தாது தடுத்து நிறுத்திவிடும்.

சில சமயம் ஒரு கம்பயின் வழியாக வரும் மின்னோட்டத்தைக் குறைக்க வேண்டி வரும். இப்படிப்பட்ட இடங்களில் ரெஸிஸ்ரர்கள் என்ற பொருட்களை இணைத்துவிட்டால் அவற்றின் மதிப்பிற்கு ஏற்ப (ஓம்ஸ்  அளவிற்கு ஏற்ப) கரண்ட் அளவைக் குறைத்து மீதிக் கரண்டை செலுத்துகின்றன. இவற்றில் பல வகைகள் இருக்கின்றன.

Wire Wound
வயர் என்றல் கம்பி எனவும் வவ்ண்ட் என்றால் சுற்றப்பட்டது எனவும் பொருள்படும். இவை கம்பியாலே அமையப்பட்ட ரெஸிஸ்ரராகும். 30கேஜ் பருமனுள்ள 100அடி நீளமுள்ள கம்பியின் தடைத் தன்மை 50ஓம்ஸ் ஆகும். இதே 30கேஜ் பருமனில் 100அடி நீளத்தில் நைக்ரோம் கம்பியின் தடைத்தன்மை 500ஓம்ஸ் அளவாகக் கூடியிருப்பதைக் கவனிக்கலாம். அதாவது பொருளைபபொறுத்து அதன் தடைத் தன்மை கூடிவிட்டது, இன்னும் 1000ஓம்ஸ் 2000ஓம்ஸ் ரெஸிஸ்ரன்ஸ் வேண்டுமானால் அதே நைக்ரோம் கம்பியின் 200அடி 300அடி என எடுத்துக்கொண்டு ஒரு பீங்கான் குழாய் மேல் சுற்றிக் கொண்டால் 1000, 2000  ஓம்ஸ் கிடைக்கும்.


Wire Wound ரெஸிஸ்ரர்கள் பொதுவாக அதிகளவு மின்சக்தி விரயமாகும் இடங்களில் பயன்படுத்தபபடுகிறது.  அதாவது 5வாட் 10வாட் 100வாட் மின்சக்தி தாங்க வேண்டிய இடங்களில் உபயோகப் படுத்தப்படுகின்றன. ஆனால் அதன் ஓம்ஸ் அளவு 10,000ஓம்ஸ் அளவிற்கு மேலாகக் கிடைக்காது. மெயின் கரண்டில் வேலை செய்யும் ஏஸி-டிஸி ரேடியோ களில் மின்னழுத்தம் (ஓல்ட்) பெருமளவில் குறைக்கப்பட வேண்டியுள்ளது. அந்த மாதிரியான இடங்களில் மின்சக்தியும் அதிக அளவில் செலவாகுமாதலால் இந்த ரெஸிஸ்ரர்கள் தான் பயன் படுத்தப்படுகின்றன.

அடுத்த பதிவில் கார்பன் ரெஸிஸ்ரர்கள் பற்றி பார்க்கலாம்.

Friday, June 29, 2012

Conductor மின்னைச் செலுத்துதல்

கண்டக்டர்
மின்சாரத்தை தன் வழியகச் செலுத்தும் சாதனங்கள் அனைத்தையும் "கண்டக்டர்" என்றும் "கடத்தி" என்றும் சொல்லப்படுகிறது, எந்தப்பொருளின் அணுக்களில் எலக்ரோன்கள் அதிக எண்ணிக்கையிலும் அவைகள் சுறறும் வேகமும் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பொருட்களெல்லாம் நல்ல கண்டக்டர்களாகும்.  இந்த அடிப்படையில் வெள்ளி தான் சிறந்த கண்டக்டர் ஆகக் கருதப்படுகிறது,  அதை அடுத்து செம்பு அல்லுமினியம் நாகம் என்ற வாரிசையில் செல்கின்றன. அதாவது எந்த ஒரு கண்டக்டரும் மின்னோட்டத்திற்கு ஓரளவு எதிர்ப்பைக் கொடுக்கும்.
இந்த எதிர்புத்தன்மையை ஆங்கிலத்தில் "ரெஸிஸ்ரன்ஸ்" என்றும் அதனுடைய அளவை "ஓம்" என்ற அளவிலும் சொல்கிறார்கள். வெள்ளி 10ஓம் எதிர்ப்பைக் கொடுத்தால் செம்பு 15ஓம் என்றும் அலுமினியம் 20ஓம் என்றும் நாகம் 25ஓம் என்றும் பொருளைப் பொறுத்து எதிர்ப்புத்தன்மை கூடும் அல்லது குறையும்.

மின்சாரம் செல்லும் கண்டக்டரின் நீளம் அதிகமாக ஆக எதிர்ப்புத்தன்மையும் அதிகமாகும். 100 மீட்டர் நீளமுள்ள கம்பி 50ஓம் எதிர்ப்பு கொடுத்தால் 200மீட்டர் நீளமுள்ள கம்பி 100ஓம் எதிர்ப்பு கொடுக்கும். ஆகவே ரேடியோ வயரிங்க் செய்யும் போது முடிந்தளவு குறுகிய வயரைப் பயன்படுத்த வேண்டும்.
அடுத்தபடியாக கம்பியின் பருமனைபபொருத்தும் அது கொடுக்கும் எதிர்ப்புத்தன்மை கூடவோ குறையவோ அமையும். பருமன் அதிகமாக ஆக எதிர்ப்புத் தன்மை குறையும்  காரணம் அதன் வழியாக இலகுவாக எலக்ரோன்கள் பாயமுடியும். கம்பியின் பருமனை "கேஜ்" என்ற அளவில் சொல்லப்படுகிறது.  0 கேஜ் அளவுள்ள கம்பியின் பருமன் ஏறத்தாள 8மி.மீட்டர் பருமனும் 10கேஜ் பருமனுள்ள கம்பியின் பருமன் 3மி.மீட்டரும் இருக்கும். கம்பியின் கேஜ் எண் அதிகமாக ஆக பருமனின் அளவு குறைந்து செலவதைக்கவனிக்கவும்.  ஆகவே 10கேஜ் அளவுள்ள கம்பி 10ஓம் எதிர்ப்புக்கொடுத்தால் 40கேஜ் அளவுள்ள கம்பி 100ஓம் எதிர்ப்புக்கொடுக்கும்.

ஆனால் இந்த அளவு சிறிதளவே மாற்றம் கொடுப்பதால் இதனை பெரிதக கொள்வதில்லை. ஒரு கம்பி மின்னோட்டத்திற்கு கொடுக்கும் எதிர்ப்பை "ஓமிக் ரெஸிஸ்ரன்ஸ்" என்பர். இந்த குறிப்பை R என்ற ஆங்கில எழுத்தாலும் குறிக்கின்றனர்.

Thursday, June 28, 2012

மின்சார உற்பத்தி முறை-2

உராயதல்

 ஒரு அரக்குத்துண்டை பட்டு வேட்டியின்மேல் உராய்ந்தால்  அரக்குத்துண்டு பட்டுவேட்டியிலிருந்து எலக்ரோன்களை இழுத்து அடக்கிக்கோள்ளும் இதுபோல்  கண்ணாடி அம்பர், மெழுகு, ப்ளானல், நைலோன் போன்ற போருட்களை ஒன்றோடு ஒன்று உராய்ந்தாலும் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்குள் எலக்ரோன்கள் குவிந்துவிடும் இம் மின்சாரத்தை ஸ்ரடிக் எலக்ரிசிற்றி என்கின்றனர்.
இரசாயன முறை
ஒரு கண்ணடிப்பாத்திரத்தினுள் புளிப்புக்கொடுக்கக்கூடிய ஒரு கரைசலை ஊற்றி இரு வேறுபட்ட உலோகங்களை அதனுள் மூழ்கினால் ஒரு எலக்ரோடிலிருந்து மறு எலக்ரோடு வழியாக மின்னோட்டம் பாயும். எலுமிச்சம் பழச்சாறு, புளித்தண்ணீர், மாட்டுச்சாணம் போன்றவற்றை இக் கரைசலுக்கு உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால் இதில் உள்ள குறைபாடு என்னவென்றால் இவற்றில் அதிக மின்னழுத்தம் கிடைக்காது. பதிலாக சில அமிலங்ளை உபயோகப்படுத்தினால் மின்னழுத்தம் அதிகம் கிடைக்ககும். உப்புக்கரைசலில் ஒரு கரித்துண்டையும், நாகத்தகட்டையும் மூழ்க்கினால் காரித்துண்டிலிருந்து எலக்ரோன்கள் இழுக்கப்படும் நாகத்தகடடில் கொண்டுபோய் குவித்துவிடும். கரி எலக்ரோன்களை குவித்துவிடுவதால் அது பொசிட்டிவாகவும் நாகத்தகட்டில் எலக்ரோன்கள் குவிவதால் அது நெகட்டிவ் ஆகவும் அமைந்துவிடுகிறது.


மின்சார உற்பத்தி முறை

கடந்த பதிவில் மின்சாரத்தின் அடிப்படை விடயங்கள் பற்றி பார்த்திருந்தோம். இனி மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனப்பார்க்கலாம்.

மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு முனையிலிருந்து அணுவிலுள்ள எலக்ரோன்களைத் தள்ள வேண்டும். எப்படி எலக்ரோன்கள் தள்ளப்படுகின்றன? அதாவது மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது எனத்தெரிந்து கொள்ள்வோம். உஷ்ணம், ஒளி, அழுத்தம், உராய்தல், இரசாயன  முறை, காந்தத்தூண்டுதல் போன்ற முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்டுகின்றது.


உஷ்ணம் (Heating)
பொதுவாக உலோகக் கம்பிகளை சூடுபடுத்தும் போது அவை விரிவடைவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உலகங்கள் சூட்டைப் பெற்றதும் எலக்ரோன்கள் தாங்கள் சுழலும் பாதையை விரிவுபடுத்திக்கொள்கின்றன ஆகவேதான் அப்பொருள் சூட்டைப்பெற்றதும் விரிவடைகிறது.  ஒரு கம்பியின் நடுவே சூடுபடுத்தும் போது எலக்ரோன்கள் குளிர்ந்த இடமாகிய இரு முனைகளையும் அடைகின்றன. ஒரு செம்பு தகட்டின் நடுவே சூடுபடுத்தும்போது இரு ம்முனைகளும் எம்பாகவே இருப்பதால் இருமுனைகளிலும் 1000 கோடி எலக்ரோன்கள் இருப்பதாகக் கொள்வோம். சூடுபடுத்தப்பட்ட இடத்திலிருந்து 300 கோடி எலக்ரோன்கள் இருமுனைகளையும் நோக்கிப் பாய ஆரம்பிக்கும். இரு முனைகளையும் ஒரு தகட்டின் மூலம் இணைப்பதால் இரு முனைகளிலிருந்தும் சரிக்கு சரியான அளவில் எலக்ரோன்கள் பாய்வதால் மின்னோட்டம் எதுவும் பாயாது.  செப்பு தகட்டின் நடுபகுதியை இரண்டாக துண்டித்து மறுபகுதில் இருந்த செப்பு தகட்டிற்கு பதிலாக துத்த நாகத்தையும் இணைத்து இரண்டையும் முக்கோண வடிவில் வைத்து கூர்முனைகளை ஒன்றாக சூடுபடுத்தினால் செம்பு தகட்டில் 300 கோடி எலக்ரோன்களும்  நாகத்தில் 100 கோடி எலக்ரோன்களும் போய்ச்சேரும்.

இதனை "த்ர்மோ கப்பிள் சிஸ்ரம்" என்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் மின்னழுத்தின் அளவு 6-8 Volt என இருக்கும். தகட்டின் பருமன் அகல நீளம், உஷ்ண அளவு ஆகியவற்றை  பொறுத்து மாறுபடும்.

ஒளி (Lighting)
சோடியம் பொட்டாசியம் போன்ற பொருட்களை இருட்டில் வைத்திருந்தால் அவைகளின் அணுக்களிலுள்ள எலக்ரோன்கள் உள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும். அவற்றின் மேல் ஒளியை படச்செய்தால் உள்ளே சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ரோன்கள் வெளிக்கிளம்பிவிடும்.  இவை போட்டோ சென்சிட்டிவ் மெட்டீரியல்ஸ் எனப்படுகின்றன. இப் பொருட்கள் எலக்ரோன் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அழுத்தம் (Pressure)
சில குவாட்ஸ், கிரிஸ்டல், ரோக்சிலே சால்ட் போன்ற பொருள் மேல் மெக்கானிக்கல் முறையில் அழுத்தம் கொடுத்தால் அவற்றின் இரு முனைகளிலும் மின்னோடம்  பாய ஆரம்பிக்கும்.
மேலும் உராய்தல் மற்றும் இரசாய முறையில் மின்சார உற்பத்தி பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Wednesday, June 27, 2012

Electrical மின்சாரம் பற்றிய பார்வை

 நாம் ஒரு நாளில் பயன்படுத்தும் 90% மான பொருட்கள் மின்சாரத்தில் இயங்கும் பொருட்களாகவே காணப்படுகிறது,  இவ்வாறு இருக்கும் வேளையில் நமது அத்தியாவசிய தேவையாகிய மின்சாரத்தைப் பற்றி அறிந்திருக்கவேண்டியது அவசியமாகிறது,

எலக்ராங்கள் மற்றும் புரோட்டங்களின் ஓட்டமே மின்சாரம் எனப்படுகிறது, இரும்பு , செம்பு, அலுமினியம், வெள்ளி, பிளாட்டினம், சிலிக்கன் என்பன மின்சாரத்தை நன்றாக கடத்தக்கூடிய பொருட்களாகும்.  இதுவரை உலகிலே 103 (2012) வகை வெவேறு விதமான மின்சாரத்தைக் கடத்தக்கூடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு அணுவிலும் ஆயிரக்கணக்கான எலக்ரோங்களும் புரோட்டன்களும்  சம எண்ணிக்கையில் அமைந்துள்ளன.  இந்த அணுவிலுள்ள எலக்ரோன்களின் நகர்வே மின்சாரம் எனப்படுகிறது, மின்சார நகர்வின் வேகமானது நொடிக்கு சுமார் 3லட்சம் கிலோமீட்டர்களாகும். இதனால் தான் மின்சாரத்தை இவ்வளவு வேகமாக வயர்கள் மூலமாக எடுத்துச் செல்ல  முடிகிறது,

மின்சாரமானது இரண்டுவகைகளாகப் பிரிக்கப்படுகிறது
  • AC மின்சாரம் Alternating current
  • DC மின்சாரம Direct Current 
 
 நமது வீட்டிற்கு வரும் மின்சாரம் 240 வோல்ட் ஏசி 50Hz மின்சாரமாகும்.  பாரிய தொழ்ற்சாலைகளுக்குக் கொடுப்பது 420 வோல்ட் ஏசி மின்சாரமாகும்.

அடுத்த பதிவுகளில் மின்சார உற்பத்தி முறை பற்றி பார்க்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் தவறாமல் பார்வையிடுங்கள்...

Saturday, March 24, 2012

RFID தகவல் தொடர்பாடல் ஒரு பார்வை


RFID என்ற தொழில்நுட்பம் பற்றி பார்க்கலாம். Radio Frequency Identification என்பதன் சுருக்கமே ஆகும்.  இது ஒரு அடையாளம் அறியும் நுட்பமாகும்.

RFID இனுடைய அடிப்படைச்சுருக்கம்
தமிழில், வானொலி அதிர்வெண் அடையாளம் என்றைழைக்கப்படும் நுட்பம் (கருவி) தனக்கு கொடுக்கப்பட்டுள்ள Programe இற்கு ஏற்ப கேள்விகளை தொடர்ச்சியாக அல்லது குறித்த கால இடைவெளியில் வானொலி அலை ஊடாக அனுப்ப கூடியதாகும்.

உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது இரண்டு நிமிடங்களுக்கு ஒருதடவை வானொலி அலைகளை வெளியிடுமாறு அமைத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் அலைவரிசையை வாங்கும் கருவியின் மூலம் (Receiver) பெற்றுக்கொண்ட அலையிலிருந்து நீங்கள் எவளவு தூரத்தில் உள்ளீர்கள் எவளவு  வேகத்தில் பயணிக்கிறீர்கள் எந்த திசையில் பயணிக்கிறீர்கள் போன்ற தகவல்களை அறியலாம். இக்கருவிகள் SIM Card களை விட சிறிய அளவிலே கிடைக்கின்றன.

இத் தொழில்நுட்பமானது 1948 இலே கண்டுபிடுக்கப்பட்டலும் பெரும்பாலும் பாவனைக்கு 1980  களிலெயே வந்தது. RFID முதல் முறையாக இரண்டாம் உலகப்போர் நடைபெறும் காலத்திலேயே British radar system தினால் German aircraft இன் அணுகுதல்களை இரகசியமாய் அறிவதற்கு பயன்படுத்தப்பட்டது. இன்றய காலப்பகுதியில் இத் தொழில்நுட்பம் மேலும் பல வளர்ச்சிகண்டுள்ளது.

RFID எவ்வாறு வேலை செய்கிறது?
இதனுடைய அடிப்படையாக தகவலை அனுப்புதல் தகவலை பெறுதல் என இரு வேலைகள் தேவைப்படுகிறது.  இங்கு தகவலை அனுப்புவன Tag எனப்படுகின்றன தகவலை பெறுபவை Antena மற்றும் காட்சிப்படுத்தகூடிய கருவி (மென்பொருளாகவும் இருக்கலாம்) ஆகியவற்றுடன் காணப்படும். Radio Frequency  பயன்படுத்தப்படுவதால் தகவல் பரிமாற்றத்தின் போது மூன்றாமவரால் தகவல் திருடப்படாமல் இருப்பதற்காக இதற்கென தனியாக Communication Protocol, Communication Network என்பனவும் செய்நிரலாக்கத்திற்காக Database Data Synchronization உள்ளிணைந்து உள்ளது.
வானொலி அலைகள் முதலில் Electronic Product Code (EPC) இனை அடைகிறது இது  அனைத்துவகையான Tag களிலிருந்து வரும் அலைகளையும் அறியும் தன்மையுடையதாகும், வேறு தேவைகளுக்காக கணினியோடு இணைத்து மென்பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.

RFIDஇல் Tags எவ்வாறு வேலைசெய்கின்றன?
        பொதுவாக இவை இரண்டுவகைப்படுகின்றன.
  •                                   Passive Tags
  •                                   Active Tags
 Passive tags ஆனவை எல்லாநேரங்களிலும் Reciever உடன் தொடர்பில் இருக்காது. தேவை ஏற்படும் போது மாத்திரம் அல்லது நாம் பயன்படுத்தும் போது மட்டும் இயங்குகின்ற. இதற்கு உதாரணமாக வியாபார நிலையங்களில் விற்பனை பொருட்களில் உத்தரவாத அட்டைகளில் பயன்படுகின்றன. இவற்றிலும் இரண்டுவகைகள் உள்ளன Class0 என்பவை Send only மற்றயவை Class1 இவை Send/Write ஆகிய இரண்டையும் செய்கின்றன.

RFIDஇல் Readers எவ்வாறு வேலைசெய்கின்றன?
Reader ஆனது குறித்த தூர அளவில் வானொலி அலையூடாக tag இலிருந்து அனுப்பப்படும் தகவலை அறிகிறது இவ்வேளை  ஒரே அலைஎண்ணையுடைய இரு tags காணப்பட்டாலும் தனக்குரியதுடன் மாத்திரம் தொடர்பை பேணுவதர்காகவே இங்கு தனித்தனியான Protocol பயன்படுத்தப்படுகிறது.
எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் எவ்வாறு இருக்கும் என பார்த்தால்.. வியாபாரப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பார்கோட் இற்கு பதிலா இது அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மேலும் இது எதிர்காலத்தில் கண்காணிப்பு மற்றும் தொடர்பதிவுகளை மேற்கொள்ளும் துறைகளில்  இதன் ஆதிக்கம் அதிகரிக்கும் எனலாம்.

RFID எவற்றில் அதிகம் பயன்படுகிறது?
  • சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் கைகளில் இதை பொருத்திவிட்டால் அவர்கள் தப்பிவிடாதவாறு பார்க்கமுடியும்
  • விமானங்களின் Passport இல் பொருத்தப்பட்டுள்ளதால் அவர்களையும் அவதானிக்க முடியும்.

  • இரத்தவங்கிகளில் வேகமாக என்னவகை இரத்தம் இருப்பில் உள்ளது என்னவகை இரத்தம் தேவை என தீர்க்கமான முடிவுகளை வேகமாக எடுப்பதற்கு பயன்படுகிறது.

Related Posts with Thumbnails