Wednesday, June 16, 2010

கேள்வி-பதில் Video களை விரும்பியவடிவத்திற்கு Convert செய்யும் மென்பொருள்

CDயில் உள்ள Video களை MP3 ஆக Convert செய்ய ஏதேனும் இலவச மென்பொருட்கள் உள்ளனவா?                                                    
-Ussain-
Video களை Convert செய்ய இணையத்தில் ஏராளமான மென்பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை Trial Version களாகவே இருக்கின்றன. இந்த மென்பொருள் நான் தேடியதில் சிறந்ததாகக் காணப்படுகிறது. இந்த மெபொருளின் பெயர் Total Video Converter. இம் மென்பொருள் மூலம் அனைத்து Video களையும் விரும்பியவடிவத்திற்கு Convert செய்துகொள்ளலாம்.


மேலுள்ள படத்தில் உள்ளவாறே Total Video Converterஐ Open செய்தவுடன் தோன்றும். இதில் New Task என்பதை அழுத்தி அதில் உள்ள Import Files என்பதை Click செய்யவதன் மூலம் Videoவினை Open செய்யலாம்.


Video இனை தெரிவுசெய்ததும் மேலுள்ளவாறு Window தோன்றும் இதில் Videoவை என்ன Format இற்கு Converter செய்ய போகிறீர்கள் என தெரிவுசெய்ய வேண்டும். (செல்பேசிக்குரிய Video வேண்டுமெனில் 3GP Video என்பதயும் MP3 ஆக வேண்டுமெனில் Mp3 Audio என்பதையும் உங்கள் தேவைக்கேற்ப தெரிவுசெய்யலாம்.) தெரிவு செய்ததும் Convert என்பதை அழுத்தவும் சிறிது நேரத்தில் Video ஆகியதும் Convert ஆகிய Video புதிய விண்டோவில் Open ஆகும்.

இந்த மென்பொருளை Download செய்ய இங்கு Click செய்யவும்.

உங்கள் கருத்துக்களை Comment இல் தெரிவிக்கவும்.

Tuesday, June 15, 2010

Flowchart இல் தீர்மானம் எடுத்தல்

கடந்த பதிவில் இரு இலக்கங்களை கூட்டுவதற்கான பாய்ச்சற்கோட்டுப் படத்தினை பார்த்தோம். இன்றைய பதிவில் ஒருவரின் வயது தரப்பட்ட நிலையில் 18ஐ விட அதிகமாக இருந்தால் Adult என்றும் 18ஐ விட குறைவாக இருந்தால் Child என்றும் காண்பிக்குமாறு பார்ப்போம்.


மேலே உள்ள படத்தில் சரிவகப்பெட்டியூடாக வயது 18 என வழங்கப்படுகிறது. அடுத்து உள்ள பெட்டியே தீர்மானம் எடுக்கும் இடமாகும் இங்கு வயது கொடுக்கப்பட்டுள்ளது ">" குறியீட்டின் மூலம் வயது 18ஐ விட அதிகமா குறைவா என தீர்மானம் எடுக்கப்படுகிறது. வயது 18ஐ விட அதிகமானால் Adult என்றும் 18ஐ விட குறைவானால் Child எனவும் வெளியீடு கிடைக்கின்றது.

Monday, June 14, 2010

Flowchart மூலம் தரவுகள் கடத்தப்படலும் கையாளப்படலும்

தரவுகள் கடத்தப்படுவதையும் கையாளப்படுவதையும் காண்பிக்க பாய்ச்சல் கோட்டு படம் பயன் படுகிறது.
இதற்கு தேவைக்கேற்ப பின்வரும் நியம குறியீடுகள் பயன் படுகின்றன.
உதாரணத்திற்கு இரண்டு எண்களின் கூட்டுத்தொகையை காண்பதற்க்கான Flowchart கீழே காண்பிக்கப்படுகிறது.
மேலே உள்ள Flowchart மூலம் விளக்கப்படுவது அங்கு சரிவகப்பெட்டியினுள் உள்ளீடாக Number1, Number2 என்ற இரு இலக்கங்கள் கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக உள்ள செவ்வக பெட்டியில் Number1, Number2 என்ற இரு இலக்கங்களையும் கூட்டுவதற்கான செயற்பாடு வழங்கப்படுகிறது. அடுத்தபடியாக உள்ள Total என்று உள்ள சரிவகத்தில் வெளியீடாக இரு இலக்கங்களும் கூட்டப்பட்டு விடை வெளியிடப்படுகிறது. விடைகிடைத்தபின் இந்த Program இன் அடுத்த செயற்ப்பாடாக Stop என்னும் கட்டளை உள்ளது ஆகவே Program நிறுத்தப்படுகிறது.
இதுபற்றி மேலும் பல உதாரணங்களுடன் அடுத்த பதிவில் பார்க்கலாம் நன்றி.

Sunday, June 13, 2010

Programming Concept

Problem Solving

பிரச்சினை ஏற்படும் போது அதை நிவர்த்திசெய்வதற்காக Program ஒன்றை நாம் தாயாரிப்பது வழமை. இதை இலத்திரனியல் தொழிநுட்பம் மூலம் தீர்வுகாண்பதாயின் Developing  Software பயன்படுத்தி தீர்வுகாணவேண்டும்.

Computer இல் Program எழுதும்போது மேற்கொள்ளும் படிமுறைகள்:-
1)பிரசினையை பகுப்பாய்வுசெய்தல்

2)வெளியீட்டை பெறக்கூடிய பொருத்தமான உள்ளீட்டை த்ரிவுசெய்ய வேண்டும்

3)Program இன் Algorithm தயாரித்தல்
     உதாரணம்:-     Flow Chat (பாய்ச்சல் கோட்டு வரைபடம்)
                                   Pseudo Code (போலொக்குறீயீட்டு முறை)

4)Computer Program எழுதுதல்

5)எழுதிய Computer  Program இனை செயற்படுத்தல்.

Friday, June 11, 2010

தொடர்பாடல் வகைகள்

தொடர்பாடலை பிரதானமாக 2 வகைப்படுத்தலாம்.
Simplex - ஒரு வழி தொடர்பாடல்
Duplex - இரு வழி தொடர்பாடல்

Simplex
பின்னூட்டல் அற்ற தொடர்பாடல் ஒரு வழி தொடர்பாடல் எனப்படும். இங்கு செய்தியை பெறுபவர் செய்தியை அனுப்புபவருக்கு தகவல் தெரிவிக்க முடியாது.
   
உதாரணம்: Radio, TV

Duplex

பின்னூட்டல் உள்ள தொடர்பாடல். இது இரு வழி தொடர்பாடல் எனப்படும். இங்கு செய்தியை பெறுபவர் செய்தியை அனுப்புபவருக்கு தனது கருத்துக்களை தெரிவிக்க முடியும். இவ் இரு வழி தொடர்பாடல் ஆனது இருவகைப்படும்.
அவை:-
        Half Duplex - மட்டுப்படுத்தப்பட்ட இரு வழி தொடர்பாடல்
        Full Duplex - முழுமையான இரு வழி தொடர்பாடல்.

Half Duplex
இங்கு செய்தியை பெறுபவர் செய்தியை அனுப்புபவருக்கு தனது கருத்துக்களை தெரிவிக்க முடியும். ஆனால், இது மட்டுப்படுத்தப்பட்ட இரு வழித்தொடர்பாடலாகவே இருப்பதனால் தனது கருத்துக்களை உடனடியாக தெரிவிக்க முடியாது. குறித்த விதிமுறைகளின் படியே தனது கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

உதாரணம்: Walk talky, Wireless, E-Mail.

Full Duplex

இங்கு செய்தியை அனுப்புபவரும் பெறுபவரும் எவ்வித தடங்கலும் இன்றி தகவல் or கருத்தை உடனடியாக தெரிவிக்க முடியும்.

உதாரணம்: Telephone, Chatting.

Sunday, June 6, 2010

Network இல் Folders இனை Share செய்தல்

Network இல் Folders இனை Share செய்தல்
Select the Folder Or Drive > Right Click > Share And Security > Click Share this Folder on the network > Click Apply > OK.


Network இனை Open செய்தல்select the my network places > open > click view work group computers > .....

Friday, June 4, 2010

கேள்வி-பதில்

கேள்வி:  Windows இனை அழித்துப்பதியாமல் license key இனை Activate செய்வது எப்படி?                         
-சிலம்பு-

பதில்:  சாதாரணமாக எல்லோராலும் பயன் படுத்தப்படும் இயங்கு தளங்களில் நீங்கள் கூறும் வசதி இல்லை. காரணம் இவை Original  Pirated XP ஆகும். இவற்றில் license key இல்லாமல் Windows install செய்யவே முடியாது.

கடைகளில் வாங்கப்படும் Original XP அல்லது Microsoft தளத்திலிருந்து பணம் செலுத்தி வாங்கப்படும் இயங்குதளங்களில் சிலவற்றில் மாத்திரம் 30 நாட்கள் பயன்படுத்தி திகதி முடிந்தபின் license key இனை கொடுத்து Activate செய்யும் வசதி காணப்படும். இவ்வாறான வதி ஏதும் இல்லாவிடின் Windows இனை அழித்து பதியும் போதே license key இனை கொடுத்து Activate செய்ய முடியும்.

Related Posts with Thumbnails