Showing posts with label Flowchart. Show all posts
Showing posts with label Flowchart. Show all posts

Tuesday, June 15, 2010

Flowchart இல் தீர்மானம் எடுத்தல்

கடந்த பதிவில் இரு இலக்கங்களை கூட்டுவதற்கான பாய்ச்சற்கோட்டுப் படத்தினை பார்த்தோம். இன்றைய பதிவில் ஒருவரின் வயது தரப்பட்ட நிலையில் 18ஐ விட அதிகமாக இருந்தால் Adult என்றும் 18ஐ விட குறைவாக இருந்தால் Child என்றும் காண்பிக்குமாறு பார்ப்போம்.


மேலே உள்ள படத்தில் சரிவகப்பெட்டியூடாக வயது 18 என வழங்கப்படுகிறது. அடுத்து உள்ள பெட்டியே தீர்மானம் எடுக்கும் இடமாகும் இங்கு வயது கொடுக்கப்பட்டுள்ளது ">" குறியீட்டின் மூலம் வயது 18ஐ விட அதிகமா குறைவா என தீர்மானம் எடுக்கப்படுகிறது. வயது 18ஐ விட அதிகமானால் Adult என்றும் 18ஐ விட குறைவானால் Child எனவும் வெளியீடு கிடைக்கின்றது.

Monday, June 14, 2010

Flowchart மூலம் தரவுகள் கடத்தப்படலும் கையாளப்படலும்

தரவுகள் கடத்தப்படுவதையும் கையாளப்படுவதையும் காண்பிக்க பாய்ச்சல் கோட்டு படம் பயன் படுகிறது.
இதற்கு தேவைக்கேற்ப பின்வரும் நியம குறியீடுகள் பயன் படுகின்றன.
உதாரணத்திற்கு இரண்டு எண்களின் கூட்டுத்தொகையை காண்பதற்க்கான Flowchart கீழே காண்பிக்கப்படுகிறது.
மேலே உள்ள Flowchart மூலம் விளக்கப்படுவது அங்கு சரிவகப்பெட்டியினுள் உள்ளீடாக Number1, Number2 என்ற இரு இலக்கங்கள் கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக உள்ள செவ்வக பெட்டியில் Number1, Number2 என்ற இரு இலக்கங்களையும் கூட்டுவதற்கான செயற்பாடு வழங்கப்படுகிறது. அடுத்தபடியாக உள்ள Total என்று உள்ள சரிவகத்தில் வெளியீடாக இரு இலக்கங்களும் கூட்டப்பட்டு விடை வெளியிடப்படுகிறது. விடைகிடைத்தபின் இந்த Program இன் அடுத்த செயற்ப்பாடாக Stop என்னும் கட்டளை உள்ளது ஆகவே Program நிறுத்தப்படுகிறது.
இதுபற்றி மேலும் பல உதாரணங்களுடன் அடுத்த பதிவில் பார்க்கலாம் நன்றி.
Related Posts with Thumbnails