Showing posts with label internet. Show all posts
Showing posts with label internet. Show all posts

Tuesday, December 13, 2011

Telnet என்பது யாது? இது எங்கு பயன்படுகிறது?

இது வலையமைப்பில் மிக முக்கியமன ஒரு பாதைவழி ஆகும் (Network Protocol). இது இணையத்தளத்திலும் சாதாரண வலையமைப்பிலும் எழுத்து வடிவிலான செயற்பாட்டுக் கட்டளைகளையும் தகவலையும் பரிமாற்றிக்கொள்வதற்கு பயன்படுகிறது.


இதன் மூலம் ஒரு தடவையில் 8 Byte தகவலை அனுப்ப மற்றும் பெற முடியும் (இணையம் ஆனாலும் சரி வலையமைப்பு ஆனாலும் சரி அனைத்துவகை தகவல் தொடர்பும் TCP [ Transmission Control Protocol ] முலம் பரிமாற்றப்படுகிறது).  Telnet ஆனது 1969 இல் அறிமுகப்படுத்தப்பட்டது இது Internet Engineering Task Force  (IETF) எனும் பிரிவினுள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஆரம்ப காலங்களில் CMD (command method) மூல்மாகவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாகவும் GUI மென்பொருள் வளர்ச்சியின் காரணமாகவும் CMD பாவனை காலப்போக்கில் குறைவடைந்து தற்பொழுது Server இலிருந்த் தகவலை பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக Client கணினிகளில் செயற்படுகிறது. 

Telnet ஆனது கீழ் வரும் பயன்பாடுகளில் பிரபலமாக உள்ளது:
  • எமது கணினியில் இருந்து Host/Server இணை அணுகுவதற்கு. 
  • வலையமைபில் கணினிகளை முகாமைத்துவப்படுத்துவதற்கு
  •  மின்னஞ்சலை கையாள்வதற்கு.

Sunday, July 11, 2010

தகவல்களை இலகுவாகவும் பாதுகாப்பாகவும் Upload செய்யக்கூடிய தளம்

உங்களிடம் இருக்கும் மென்பொருட்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் என அனைத்து தகவல்களையும் இணையத்தில் Upload செய்துவிட்டால் நீங்கள் செல்லும் இடமெல்லாம் சீடியிலோ, பெண்டிரைவிலோ பதிந்துசெல்லவேண்டிய அவசியம் இருக்காது நீங்கள் பயன்படுத்தப்போகும் கணினியில் இணையைஇணைப்பு இருந்தால் போதும் இலகுவாக உங்கள் தகவல்களைப் பெற்றிடலாம். 

மேலும்  அதிக அளவுள்ள தகவல்களை மின்னஞ்சல் செய்ய இந்த தளத்தில் Upload செய்ய்துவிட்டு அதற்கான Link இனை கொடுப்பதன்மூலம் தகவலை இலகுவாக பகிர்ந்திடலாம்.


இந்த இணையத்தளத்தின் முகவரி http://www.mediafire.com

புதிதாக கணக்கை உருவாக்கிட http://www.mediafire.com/register.php

Friday, July 2, 2010

உள்வரும் மின்னஞ்சல்களை குறித்த Folder இனுள் விழச்செய்தல்

பெரும்பாலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் Inbox இலே காணபடும். Facebook, Feed Burner மூலம் பெறப்படும் மின்னஞ்சல்கள், நண்பர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் என எல்லாமே ஒன்றாக காணப்படும் இது நாம் மின்னஞ்சல்களை இலகுவாக ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு சிரமமிலாமல் குறித்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் மின்னஞ்சல்களை வேறு வேறாக குறித்த Folder இனுள் விழச்செய்யும் வசதி Yahoo, Gmail போன்றவற்றில் உள்ளது.

Yahoo வில் Folder அமைப்பதற்கு முதலில் Folders என்னும் பகுதியில் உள்ள Add என்பதை அழுத்தவும் தோன்றும் Folder இற்கு விரும்பிய பெயரைக்கொடுக்கவும். இப்பொழுது Inbox இல் உள்ள குறித்த மின்னஞ்சலை Open செய்யவும் Action என்பதை Click செய்யவும் தோன்றும் Menu வில் Filter Emails Like This... என்பதை Click செய்யவும் Add Filter என்னும் Menu வில் உள்ள Then Move the message to: என்பதன் கீழ் உள்ள -Choose Folder- என்பதில் நீங்கள் Add செய்த Folder இனை Select செய்து Save என்பதை Click செய்ததும் தோன்றும் Menu விற்கு OK என்பதை Click செய்யவும்.

Gmail இல் இதனை செய்வதற்கு மின்னஞ்சலை Select செய்து More actions என்பதை Click செய்யவும் அதில் உள்ள Filter messages like these என்பதை Click செய்ததும் Next step என்பதை Click செய்யவும் Skip in inbox என்பதையும் Apply the label என்பதையும் select செய்து Choose Label என்பதில் new label என்பதை கொடுத்து label இற்கான பெயரையும் கொடுத்து ஒகே இனை கொடுத்து Create Filter என்பதை அழுத்தவும்.

இனி நீங்கள் தெரிவுசெய்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் அனைத்து மின்னஞ்சல்களும் நேரடியாக நீங்கள் Add செய்த Folder இனுள்ளேவரும்.இனி உங்கள் Inbox தெளிவாகவும் மின்னஞ்சல்களை இலகுவாகப் படிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
Related Posts with Thumbnails