Showing posts with label Registry. Show all posts
Showing posts with label Registry. Show all posts

Wednesday, June 30, 2010

Default Programs Files Folder இனை எமது விருப்பத்திற்கேற்ப மாற்றுதல்

My Computer இல் உள்ள C:\ டிரைவில் Program Files என்ற Folder உள்ளது. நாம் சாதாரணமா ஒரு மென்பொருளை Install செய்ய முயலும்போது Default ஆக
"C:\Program Files" என்ற Folder இல் பதியவா என கேட்கும் அவ்வாறில்லாமல் எப்போதும் நாம் விரும்பியபடி ஓர் இடத்தில் Install செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.

சில மென்பொருட்களை வேறு இடங்களில் பதிய முடியாதபடி இருக்கும். உதாரணமாக: Google Earth, Yahoo Messenger இது போன்ற மென்பொருட்களை சாதாரணமாக வேறு இடங்களில் பதிய முடியாது.

Default Programs Files Folder இனை மாற்றியமைப்பதற்கு Run> Regedit என டைப் செய்து Enter இனை அழுத்தவும். தோன்றும் Window இல்
"HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\Current Version" என்ற இடத்திற்குச் செல்லவும். இங்கு வலப்பக்கம் உள்ள ProgrameFilesDir என்பதை Double Click செய்யவும். தோன்றும் Menu வில் Value data என்ற இடத்தில் "C:\Program Files" என்று இருப்பதை நீங்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றவும் உதாரணமாக: "D:\Softwares" என மாற்றி OK இனை அழுத்தவும்.


இப்பொழுது ஒருமுறை கணினியை Restart செய்துவிட்டு மென்பொருட்களை நிறும்போது நீங்கள் தெரிவுசெய்த இடத்திலே நிறுவப்படும்.
Related Posts with Thumbnails